கரகரப்பிரியா
கரகரப்பிரியா (கரஹரப்பிரியா) கருநாடக இசையின் 22 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் சிறீராகம் 22 வது இராகமாகக் கொள்ளப்படுகிறது. இந்துஸ்தானி இசையில் இதற்கு "காபிதாட்" என்பது பெயர்.
இலக்கணம்

கரகரப்பிரியா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: | ஸ ரி2 க2 ம1 ப த2 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த2 ப ம1 க2 ரி2 ஸ |
- வேத என்றழைக்கப்படும் 4 வது சக்கரத்தில் 4 வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்
- பிரத்தியாகத கமகம் இவ்விராகத்திற்கு அழகைக் கொடுக்கும்.
- கருணைச் சுவையைக் கொண்டது. விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும் இராகம். எப்போதும் பாடலாம்.
- இவ்விராகமே பழமையான சாமகானத்தை ஒத்து இருப்பதாக கூறப்படுகிறது.
- இதற்கு நேர் பிரதி மத்திம இராகம் ஹேமவதி (58).
- இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரி, க, ம, ப, நி முறையே கிரக பேதத்தின் வழியாக ஹனுமத்தோடி, மேசகல்யாணி, ஹரிகாம்போஜி, நடபைரவி, தீரசங்கராபரணம் ஆகிய மேளங்களைக் கொடுக்கும்.
- தியாகராஜர் இந்த இராகத்தில் பல கிருதிகளை இயற்றியுள்ளார்.
உருப்படிகள்
- கிருதி : சக்கனிராஜ : ஆதி : தியாகராஜர்
- கிருதி : பக்கல நிலபடி : மிஸ்ர சாபு : தியாகராஜர்.
- கிருதி : என்ன செய்தாலும் : ஆதி : பாபநாசம் சிவன்
- கிருதி : கண் பாரய்யா : ஆதி : கோடீஸ்வர ஐயர்
- கிருதி : மாயவித்தை செய்வோனே : ஆதி : முத்துத் தாண்டவர்
ஜன்ய இராகங்கள்
கரகரப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை.
- ஆபேரி
- ஆபோகி
- உசேனி
- உதயரவிச்சந்திரிக்கா
- களாநிதி
- கன்னடகௌளை
- காப்பி
- கானடா
- கிரணாவளி
- சிறீராகம்
- சிறீரஞ்சனி
- சிவரஞ்சனி
- சுத்தபங்காளா
- தர்பார்
- நாகவல்லி
- நாயகி
- நாஹரி
- மகுடதாரிணி
- மத்தியமாவதி
- மயூரத்வனி
- மத்திமராவளி
- மணிரங்கு
- முகாரி
- தேவமனோகரி
- ஜெயமனோகரி
- ரீதிகௌளை
- பாலச்சந்திரிக்கா
- பிருந்தாவனசாரங்கா
- புஷ்பதிலகா
- பூர்ணகளாநிதி
- மஞ்சரி
- ஜெயநாராயணி
- ஸ்வரபூஷணி
- சித்தசேனா
- மனோகரி
- மாளவசிறீ
- ஜெயந்தசேனா
- பலமஞ்சரி
- தேவகிரியா
- லலிதமனோகரி
- ருத்ரப்பிரியா
- இனகரப்பிரியா
- ஓம்காரி
- வரமு
- போகவதி
திரையிசைப் பாடல்கள்
கரகரப்பிரியா இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:
- " மாதவிப் பொன்மயிலாள்... " - இரு மலர்கள்
- " மழை வருது மழை வருது... " - மை டியர் மார்த்தாண்டன்
- " மாப்பிள்ளைக்கு மாமன் மனசு... " - நெற்றிக்கண்
- " தானா வந்த சந்தனமே... " - ஊரு விட்டு ஊரு வந்து
- "பூங்காற்று திரும்புமா..." :- முதல் மரியாதை
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.