ஆபேரி

ஆபேரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 22வது மேளகர்த்தா இராகமும், "வேத" என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

ஆரோகணம் உதயரவிச்சந்திரிகாவின் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
அவரோகணம் கரகரப்பிரியாவின் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), கைசிக நிசாதம் (நி2), சதுச்ருதி தைவதம் (த2), சதுச்ருதி ரிசபம் (ரி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:

ஆரோகணம்:ச க21 ப நி2 ச்
அவரோகணம்:ச் நி22 ப ம12 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "ஔடவ சம்பூரண" இராகம் எனப்படுகின்றது.

உருப்படிகள்[2]

வகைபாடல்தாளம்கலைஞர்
கிருதிநகுமோமுஆதிதியாகராஜர்
கிருதிவினாபேரிஆதிமுத்துசுவாமி தீட்சிதர்
கிருதிஏகாம்பர நாதாஆதிபெரியசாமித்தூரன்
கிருதிகந்தா வந்தருள்ஆதிபாபநாசம் சிவன்
கிருதிஎன்னை எனக்குரூபகம்முத்துத்தாண்டவர்
கிருதிநின்னுவினாரூபகம்சியாமா சாஸ்திரி

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. Music Handbook - Raga Index -A 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. பக்கம் எண்கள்: 147 & 148, இந்திய இசைக்கருவூலம் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006; வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.), ஆசிரியர்: டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.