பரசு

பரசு இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

பரசு ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
பரசு அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த1), காகலி நிசாதம் (நி3), சுத்த ரிசபம் (ரி1) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்:ச க31 ப த1 நி3 ச்
அவரோகணம்:ச் நி31 ப ம13 ரி1

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் எல்லாச் சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ சம்பூரண" இராகம் என்பர்.

உருப்படிகள்[1]

வகைஉருப்படிதாளம்கலைஞர்
கிருதி" ஸ்ரீசுப்ரபகவந்தம் "அடமுத்துசுவாமி தீட்சிதர்
கிருதி" நீலயதாட்சி "மிஸ்ரசாபுசியாமா சாஸ்திரி
கிருதி" திரிலோக மாதா "மிஸ்ரசாபுசியாமா சாஸ்திரி
கிருதி" அடிமலரினை "ஆதிபாபநாசம் சிவன்
கிருதி"சர்வமங்கள"மிஸ்ரசாபுமுத்தையா பாகவதர்
கிருதி" ஜகந்நாதா "ஆதிவேதநாயகம் பிள்ளை
பதம்" இந்தா விபீஷணா "மிஸ்ரசாபுஅருணாசலக் கவிராயர்
ஜாவளி" சொல்லிநெனகு "ஆதிபட்டணம் சுப்பிரமணிய ஐயர்
தில்லானா" ததீம்தீம்த "ஆதிபட்டணம் சுப்பிரமணிய ஐயர்
தரு" வரமைன "மிஸ்ரசாபுதியாகராஜ சுவாமிகள்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.

உசாத்துணைகள்

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.