ராமப்பிரியா

ராமப்பிரியா கருநாடக இசை முறையில் 52வது மேளகர்த்தா அல்லது ஜனக இராகமாகும். இந்த மேளத்தில் பிறக்கும் ரமாமனோகரி அசம்பூர்ண மேளபத்ததியில் 52வது மேளமாக விளங்குகிறது.

இலக்கணம்

ராமப்பிரியா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்:ஸ ரி132 ப த2 நி2 ஸ்
அவரோகணம்:ஸ் நி22 ப ம23 ரி1
  • பிரம்ம என்றழைக்கப் படும் 9வது வட்டத்தில் (சக்கரத்தில்) 4 வது இராகம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

  • பிரத்தியாகத கமகம் இந்த இராகத்திற்கு அழகைக் கொடுக்கிறது.
  • கருணைச் சுவையை வெளிப் படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.
  • 16வது மேளமாகிய சக்ரவாகம் இந்த இராகத்தின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
  • இதன் முறையே கிரக பேதத்தின் வழியாக ஒரு மேளகர்த்தா இராகத்தையும் கொடுக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).

உருப்படிகள்

வகைஉருப்படிஇயற்றியவர்தாளம்
கிருதிசந்தேகமுனுதியாகராஜர்ஆதி
கிருதிஸ்மராம் யகம்முத்துசாமி தீட்சிதர்ரூபகம்
கிருதிதூக்கிய பாதத்தின்முத்துத் தாண்டவர்ரூபகம்
கிருதிசாமிசதாகோடீஸ்வர ஐயர்ஆதி
கிருதிஎந்நாவில் சிறிதும்பாபநாசம் சிவன்ஆதி

ஜன்ய இராகங்கள்

ராமப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை.

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.