கௌரி (இராகம்)
கௌரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15வது மேளகர்த்தா இராகமாகிய மாயாமாளவகௌளையின் (அக்னி/3வது சக்கரம் 3வது மேளம்) ஜன்னிய இராகம் ஆகும்.
வரலாறு
கௌரி இராகம் ஜகதேகமல்லர் இயற்றிய சங்கீத சூடாமணியிலும், ஸ்ரீனிவாஸரின் ராக தத்வ விபோதத்திலும், பாவபட்டரின் (Bhavabhatta) அனுப சங்கீத விலாசத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ப்ரஹதர்ம புராணம் கௌரியை காந்தாரத்தின் ராகிணியாக (மனைவி ராகம்) குறிப்பிடுகிறது.[1]
விளக்கம்


ஆரோகணம் | ஸ ரி ம ப நி ஸ் |
அவரோகணம் | ஸ் நி ப த ம க ரி ஸ |
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
கௌரி ஒரு ஔடவ-சம்பூர்ண ராகம். உபாங்க ராகம். திரிஸ்தாயி ராகம். கான ரஸ ராகம். இதில் வரும் ரி ஏகஸ்ருதி ரிஷபத்திற்கு அருகிலுள்ளது. நி கம்பித கமகத்துடன் பிடிக்கப்படுகிறது. ம மற்றும் நி ராகத்தின் சாயையை அளிக்கும் ஸவரங்கள். க நியாஸ ஸவரம். ப அம்ஸ ஸ்வரம். விரிவான ஆலாபனைக்கு இடமளிக்காது. ரிரிபமபா என்பது ரக்திப்பிரயோகம். பதபஸ் விசேஷ சஞ்சாரம். இந்த ராகத்தில் உருப்படிகள் (பாடல்கள்) ரி-யில் தொடங்குகின்றன. [1]
உருப்படிகள்
- கீர்த்தனை: ஜெயஜெயசிறீரகு
- கிருதி: துர்ஜடி நடிஞ்செனெ, ஆதி தாளம், பல்லவி துரைசாமி அய்யர்[1]
- கிருதி: கௌரி கிரிராஜ குமாரி, திஸ்ர ஏக தாளம், முத்துஸ்வாமி தீக்ஷிதர்[1]
குறிப்புகளும் மேற்கோள்களும்
- South Indian Music - Book VI, Prof. P. Sambamurthy