சுத்தசாவேரி

சுத்தசாவேரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 29வது மேளகர்த்தா இராகமாகிய "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 5 வது இராகமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

சுத்தசாவேரி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்:ஸ ரி21 ப த2 ஸ்
அவரோகணம்:ஸ் த2 ப ம1 ரி2
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), ஆகிய சுரங்கள் வருகின்றன.

இதர அம்சங்கள்

உருப்படிகள்[1]

கிருதிதாளம்கலைஞர்
ஆனலேகர (கீதம்)திரிபுடைபுரந்தரதாசர்
வண்டார்பூங்குழல்நாயகி (வர்ணம்)அடதிருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளை
காலஹரண ரூபகம்தியாகராஜர்
தாரிணி தெலுசுகொண்டிஆதிதியாகராஜர்
ஸ்ரீ குருகுஹரூபகம்முத்துசுவாமி தீட்சிதர்
கண்டாயோஆதிமுத்துத்தாண்டவர்
தருணம் தருணம்ரூபகம்வேதநாயகம் பிள்ளை
தாயே திரிபுரசுந்தரிகண்டசாபுபெரியசாமித் தூரன்
ரஞ்சிதகவிரூபகம்கோடீஸ்வர ஐயர்
கற்பகாம்பிகைகண்ட ஜம்பைபாபநாசம் சிவன்

திரையிசையில் இவ்விராகம்

  • காதல் மயக்கம் ... - புதுமைப்பெண்
  • கோயில் மணி ஓசை தன்னை ... - கிழக்கே போகும் ரயில்
  • மலர்களில் ஆடும் இளமை புதுமையே ... - கல்யாணராமன்
  • ராதா ராதா நீ எங்கே ... - மீண்டும் கோகிலா

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. பக்கம் எண்: 199 & 200, டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006; வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.)

உசாத்துணைகள்

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.