இந்தோளம்
இந்தோளம் (அல்லது ஹிந்தோளம்) இராகம் 20வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 2வது மேளமாகிய நடபைரவியின் ஜன்னிய இராகம் ஆகும். சுபகரமான இவ்விராகம் விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும்.
இரவு தூங்க முடியாமல் எதேனும் வயிறு கோளாறு ஏற்பட்டு கைவசம் "antacid" ஏதும் இல்லாத பட்சத்தில் ஹிந்தோள ராக பாடலை பாடுங்கள். ராக ஆராய்ச்சியாளர்கள் இது நள்ளிரவில் பாடவேண்டிய ராகமென்றும், இந்த ராகத்தால் வாயுக்கோளாறு நீங்கும் என்றும் கூறுகின்றனர்.
ஹிந்தோள ராகத்தை சுத்த-தன்யாசி ராகத்துடன் குழப்பிக் கொள்ள சாத்தியக்கூறு அதிகம்.
இலக்கணம்

ஹிந்தோளம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: | ஸ க2 ம1 த1 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ம1 க2 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- ரிஷபம், பஞ்சமம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இது உபாங்க இராகம் ஆகும்.
- சர்வ ஸ்வர மூர்ச்சனாகாரக ஜன்ய இராகம்.
- இவ்விராகத்தின் காந்தார, மத்திம, தைவத, நிஷாத மூர்ச்சனைகளே முறையே சுத்தசாவேரி, உதயரவிச்சந்திரிக்கா, மோகனம், மத்தியமாவதி ஆகிய இராகங்களாக ஒலிக்கின்றன.
உருப்படிகள்
வகை | உருப்படி | தாளம் | கலைஞர் |
---|---|---|---|
வர்ணம் | ஸாமஜ வரகமண | ஆதி | தியாகராஜர் |
வர்ணம் | மாமவது ஸ்ரீ ஸரஸ்வதி | ஆதி | மைசூர் வாசுதேவச்சாரியார் |
வர்ணம் | கோவர்தன கிரீஷம் ஸ்மராமி | ரூபகம் | முத்துஸ்வாமி தீட்சிதர் |
கிருதி | ஸாம கான லோலனே | ஆதி | ஜி. என். பாலசுப்பிரமணியம் |
கிருத | நம்பி கெட்டவர் எவர் | ஆதி | பாபநாசம் சிவன் |
திரையிசைப் பாடல்கள்
- "ஓம் நமசிவாயா..." - சலங்கை ஒலி
- "மலரோ நிலவோ மலைமகளோ..." -
- "தரிசனம் கிடைக்காதா..." – அலைகள் ஓய்வதில்லை – எஸ்.ஜானகி
- "நான் தேடும் செவ்வந்திபூ இது..."– தர்மபத்தினி – எஸ்.ஜானகி, இளையராஜா
- "பூவரசம்பூ பூத்தாச்சு..."– கிழக்கே போகும் ரயில் – எஸ்.ஜானகி
- "ஆனந்தத் தேன்காற்று..."– மணிப்பூர் மாமியார் – இளையராஜா
- "கண்ணா உன்னைத் தேடுகிறேன்..."– உனக்காகவே வாழ்கிறேன்
- "பாட வந்ததோர் கானம்..." -
- "ஸ்ரீதேவி என் வாழ்வில்..." -
- "பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு..."- மண்வாசனை
- "உன்னால் முடியும் தம்பி தம்பி"- உன்னால் முடியும் தம்பி தம்பி
- "மார்கழிப் பூவே..." -
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.