மைசூர் வாசுதேவாச்சாரியார்

மைசூர் வாசுதேவாச்சாரியார் (Mysore Vasudevachar, கன்னடம்: ಮೈಸೂರು ವಾಸುದೇವಾಚಾರ್; மே 28, 1865 – மே 17, 1961) கருநாடக இசையின் ஒரு சிறந்த பாடலாசிரியர்.

மைசூர் வாசுதேவாச்சாரியார்
பிறப்பு28 மே 1865
கருநாடகம்
இறப்பு17 மே 1961 (அகவை 95)
பாணிகருநாடக இசை

வாழ்க்கைக் குறிப்பு

வாசுதேவாச்சாரியார், சுப்பிரமணியாச்சாரியாரின் மகனாக கோயம்புத்தூர் ஜில்லாவிலுள்ள "செவ்வூர்" எனும் கிராமத்தில் பிறந்தார். இவர் முதலில் சமஸ்கிருதம் கற்றார். அதன் பின் இசையைக் கற்க முற்பட்டார். பட்டினம் சுப்பிரமணி ஐயரின் சிஷ்யராக இருந்து ஒரு சிறந்த சங்கீத வித்துவானாகவும், வாக்கேயகாரராகவும் விளங்கினார். இவரது சாரீரமானது அனுமந்த்ர ஸ்தாயி பஞ்சமத்திலிருந்து தாரஸ்தாயி கந்தாரம் வரை சுலபமாக பாடும் திறனுடையது.

இசைப்பணி

இவரது உருப்படிகளாலேயே இவரின் புகழ் பிரசித்தமாயுள்ளன. அவற்றிற்கு உதாரணமாக "ப்ரோச்சேவ ரெவருரா" என்ற கமாஸ் ராக உருப்படியைக் கூறலாம். இவரது இறுதிக் காலத்தை அடையாரில் உள்ள கலாகக்ஷேத்ராவில் கழித்தார். இந்த ஸ்தாபனத்தின் உபதலைவராக இருந்து "சீதா கல்யாணம்" என்ற நாட்டிய நாடகத்திற்கு இசையமைத்தார். இவர் கவிஞர்கள் வாழ்க்கை வரலாறு, கீர்த்தனைகள், இராகமாலிகைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு முதலிய மொழிகளில் அனேக கீர்த்தனங்களைச் செய்து அச்சிட்டு பிரசித்தப்படுத்தினார். இவர் தமது காலத்தில் வாழ்ந்த ஏனைய இசைப்பாடகர்களை எல்லாம் தமது இசை வன்மையால் வச்சுரித்து நேயத்துடன் வாழச்செய்தார். 60 ஆண்டு காலமாக தென்னாட்டிலே இவரின் இசை பிரகாசித்ததுடன் பல அரசர்களாலும், மடாதிபதிகளாலும் போற்றப்பட்டார். பலர் இவரிடம் சிஷ்யராக சேர்ந்து இசை பயின்றனர். இவரது முத்திரை "வாசுதேவ" என்பதாகும்.

பட்டங்களும் விருதுகளும்

மேற்கோள்கள்

  1. "AWARDS - SANGITA KALANIDHI". மியூசிக் அகாதெமி (23 டிசம்பர் 2018). பார்த்த நாள் 23 டிசம்பர் 2018.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.