ஏமாங்கி
ஏமாங்கி அல்லது ஹேமாங்கி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 54வது மேளகர்த்தா இராகமும், "பிரம்ம" என்று அழைக்கப்படும் 9வது சக்கரத்தின் 6வது இராகமுமாகிய விஷ்வம்பரியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்

ஹேமாங்கி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), ஷட்சுருதி தைவதம் (த3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ஸ ரி1 க3 ம2 த3 ஸ் |
அவரோகணம்: | ஸ் த3 ம2 க3 ரி1 ஸ |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர்.
இவற்றையும் பார்க்கவும்
| |||||||
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.