கீர்த்தனை

கீர்த்தனை இறை இசைப் பகுதியைச் (வைதீக கானத்தை) சேர்ந்தது. சாகித்யம் இறைவன் அல்லது இறைவியைப் புகழ்வதாகவோ அல்லது அவர்களிடம் மன்னிப்பு வேண்டுவதாகவோ பக்தி நிரம்பியதாக இருக்கும். புராண நிகழ்ச்சிகளைப் பற்றியும் பக்தர்களின் உணர்ச்சிகளைத் தெரிவிப்பதாகவும் இருக்கலாம். எனவே கீர்த்தனைகளில் சுரப்பகுதியை (தாதுவை) விட சொற்பகுதியே (மாதுவே) முக்கியமானது என்று கருதப்படுகிறது.

இதன் அங்கங்கள்

கீர்த்தனைக்குப் பிறகு தான் கிருதி என்ற இசைவடிவம் தோன்றியது. கீர்த்தனைக்குப் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்று பகுதிகள் உண்டு. இந்த சரணங்கள் எல்லாம் ஒரு வகையான சுரப் பகுதியைக் கொண்டிருக்கும். சில சமயங்களில் பல்லவிக்குரிய சுரப்பகுதியே சரணத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இதன் தன்மை

சாதாரண இசையறிவு உள்ளவர்களும் கீர்த்தனைகளைப் பாட இயலும். ஏனெனில் அவை எளிமையான, பழக்கமான இராகங்களில் அமைக்கப்பட்டவையாகவும், பலர் சேர்ந்து பாட ஏற்றதாகவும் இருக்கும்.

கீர்த்தனைகளை இயற்றியோர்

  1. தியாகராஜர்
  2. முத்துசாமி தீட்சிதர்
  3. சியாமா சாஸ்திரிகள்
  4. நரசிங் மேத்தா
  5. புரந்தரதாசர்
  6. ராமதாசா்
  7. தாள்ளபாக்கம் சின்னையா
  8. நாராயண தீர்த்தர்
  9. கிரிராஜ கவி
  10. சதாசிவப் பிரம்மேந்திரர்
  11. விஜயகோபாலஸ்வாமி
  12. இராமச்சந்திர யதீந்திரா
  13. சாரங்க பாணி
  14. முத்துத் தாண்டவர்
  15. அருணாசலக் கவிராயர்
  16. கவிக்குஞ்சரபாரதி
  17. கோபாலகிருஷ்ண பாரதி - நந்தனார் சரித்திரம்
  18. கோடீஸ்வர் ஐயர்
  19. வேதநாயகம் பிள்ளை
  20. சுத்தானந்தபாரதி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.