அலெக்சாந்திரியா நகர அத்தனாசியார்

அலெக்சாந்திரியா நகர அத்தனாசியார்(கிரேக்க மொழி: Ἀθανάσιος Ἀλεξανδρείας, Athanásios Alexandrías) (பி. சுமார். 296-298 – இ. 2 மே 373), அல்லது அலெக்சாந்திரியா நகரின் முதலாம் அத்தனாசியார் அல்லது புனித பெரிய அத்தனாசியார் என்பவர் 8 ஜூன் 328 முதல் 2 மே 373வரை மொத்தம் 45 ஆண்டுகள் அலெக்சாந்திரியா நகரின் 20ஆம் ஆயராக இருந்தவர் ஆவார். இவரின் பணிக்காலத்தில் மொத்தம் 17 ஆண்டுகள் நான்கு வெவ்வேறு உரோமை அரசர்களால் ஐந்து முறை நாடு கடத்தப்பட்டார். இவர் ஒரு சிறந்த இறையியலாளரும், திருச்சபைத் தந்தையர்களுல் ஒருவரும், ஆரியனிய தப்பரைக்கெதிரான திரித்துவம் குறித்த வாதவல்லுநரும், நான்காம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க எகிப்திய தலைவரும் ஆவார்.

அலெக்சாந்திரியா நகர புனித
அத்தனாசியார்
அலெக்சாந்திரியா நகர அத்தனாசியாரின் திருஓவியம்
திருச்சபையின் மறைவல்லுநர்
பிறப்புசுமார் c. 296-298
அலெக்சாந்திரியா, எகிப்து
இறப்பு2 மே 373(373-05-02) (அகவை 77)
அலெக்சாந்திரியா, எகிப்து
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம், ஆங்கிலிக்க ஒன்றியம்
முக்கிய திருத்தலங்கள்காப்டிக் மரபுவழி திருச்சபையின் புனித மாற்கு முதன்மைப்பேராலயம், கெய்ரோ, எகிப்து
திருவிழா2 மே (மேற்கத்திய கிறித்தவம்)
18 ஜனவரி (கிழக்கு மரபுவழி திருச்சபை)
சித்தரிக்கப்படும் வகைகையில் ஏடோடு ஒரு ஆயர் அஞ்ஞானிகளோடு வாதிடுவது போன்று.

அத்தனாசியார் கிழக்கின் நான்கு மிகப்பெரும் திருச்சபையின் மறைவல்லுநர்களுல் ஒருவராக கத்தோலிக்க திருச்சபையினால் மதிக்கப்படுகின்றார்.[1] கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவர் மரபின் தந்தை ("Father of Orthodoxy") என புகழப்படுகின்றார். சீர்திருத்தத் திருச்சபையினர் பலரும் இவரை விவிலியத் திருமுறையின் தந்தை என புகழ்ந்துள்ளனர். மேற்கத்திய கிறித்தவத்தில் இவரின் விழா நாள் 2 மே ஆகும், கிழக்கத்திய கிறித்தவத்தில் 18 ஜனவரி ஆகும்.

மேற்கோள்கள்

  1.   "Doctors of the Church". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.