புனித ஜார்ஜ்

புனித ஜார்ஜ் (Saint George, கி.பி 275/281 – ஏப்ரல் 23, 303) உரோமன் படைத்துறையில் பணியாற்றிய ஓர் கிரேக்க வீரர். இவரது தந்தை ஆசிய மைனரைச் சேர்ந்த கப்பாடோசியா என்றவிடத்தில் இருந்த கெரோன்டியோசு என்பவராவார். இவரது அன்னையார் லிட்டா நகரைச் சேர்ந்த போலிகிரோனியா ஆவார். தற்போது இசுரேலில் உள்ள இந்த நகரம் கிமு 333இலிருந்தே, அலெக்சாண்டர் கைப்பற்றிய பின்னர், கிரேக்கர்கள் வாழும் நகரமாக இருந்தது. ஜார்ஜ் உரோமன் படைத்துறையில் அதிகாரியாக பதவி ஏற்றம் பெற்றவர். கிறித்தவர்களால் வேத சாட்சியாக வணங்கப்படுபவர். கத்தோலிக்க (மேற்கத்திய கிழக்கு ரைட்டுகள்), ஆங்கிலிக்க, கிழக்கு மரபுவழி, மற்றும் கிழக்கத்திய மரபுவழி திருச்சபைகளின் புனிதர்களின் வரலாற்றில் புனிதர் ஜார்ஜ் மிகவும் வணங்கப்படும் புனிதர்களில் ஒருவராக உள்ளார். புனித ஜார்ஜும் டிராகனும் கதை மூலமாக இவர் நினைவு கூறப்படுகிறார்; பதினான்கு புனித உதவியாளர்களில் ஒருவராவார். இவரது திருவிழா ஏப்ரல் 23 அன்று கொண்டாடப்படுகிறது. படைத்துறை புனிதர்களில் மிக முக்கியமானவராக கருதப்படுகிறார்.

லிட்டாவின் புனித ஜார்ஜ்
புனித ஜார்ஜ், 1472இல் கார்லோ கிரிவெலி வரைந்தது
மறைசாட்சி
பிறப்புகி.பி 280

லிட்டா, சிரிய பாலத்தீனம், உரோமப் பேரரசு[1][2]
இறப்புஏப்ரல் 23, 303
நிக்கோமெடியா, பைத்தினியா, உரோமப் பேரரசு[1][2]
ஏற்கும் சபை/சமயம்உரோமன் கத்தோலிக்கம்
ஆங்கிலிக்கம்
லூதரனியம்
கிழக்கத்திய மரபுவழி திருச்சபை
கிழக்கு மரபுவழி திருச்சபை
முக்கிய திருத்தலங்கள்புனித ஜார்ஜ் தேவாலயம், லிட்டா
திருவிழாஏப்ரல் 23
சித்தரிக்கப்படும் வகைஓர் படைவீரராக கவச உடை அணிந்து, கையில் சிலுவை முனை கொண்ட ஈட்டியை ஏந்தி, வெண்குதிரையில் அமர்ந்த வண்ணம் டிராகனை கொல்பவராகச் சித்தரிக்கப்படுகிறார். மேற்கத்திய சபைகளில் கவசம் அல்லது கேடயம் அல்லது பட்டியில் புனித ஜார்ஜின் சிலுவை காட்டப்பட்டுள்ளது.
பாதுகாவல்உலகின் பல பகுதிகளைப் பாதுகாப்பதாக நம்பப்படுகிறது.

இவர் பல நிலபகுதிகளையும் தொழில்களையும் அமைப்புக்களையும் நோயாளிகளையும் காப்பதாக நம்பப்படுகிறது. இவரது பாதுகாவலில் உள்ள நிலப்பகுதிகளில் இந்தியாவும் ஒன்று. மற்ற முக்கிய நிலப்பகுதிகள்: ஜார்ஜியா, இங்கிலாந்து, எகிப்து, பல்கேரியா, அரகொன், காத்தலோனியா, உருமேனியா, எத்தியோப்பியா, கிரீசு, ஈராக், லித்துவேனியா, பாலத்தீனம், போர்த்துக்கல், செர்பியா, உக்ரைன் மற்றும் உருசியா ஆகும்.

காட்சிக்கூடம்

இதைவிட பெரிய காட்சிக்கூடம் காண, காண்க: புனித ஜார்ஜ் காட்சிக்கூடம்.

சான்றுகோள்கள்

  1. Foakes-Jackson, FJ (2005), A History of the Christian Church, Cosimo Press, p. 461, ISBN 1-59605-452-2.
  2. Ball, Ann (2003), Encyclopedia of Catholic Devotions and Practices, p. 568, ISBN 0-87973-910-X.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.