ரபேல் (அதிதூதர்)

ரபேல் (ஆங்கிலம்:Raphael; எபிரேயம்: רָפָאֵל, Rāfāʾēl, "கடவுள் குணமளிக்கின்றார்") யூத மற்றும் கிறித்தவ மரபுப்படி குணப்படுத்தும் இறைதூதர் ஆவார். கத்தோலிக்கர்கள் மற்றும் மரபு வழி திருச்சபையினரால் இறையேவுதல் பெற்ற நூலாக ஏற்கப்பட்ட விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியாகிய இணைத் திருமுறைத் தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றான தோபித்து நூலில் அதிதூதர் புனித ரபேல், குறிக்கப்பட்டுள்ளார். விவிலியத்தில் பெயரோடு குறிக்கப்படுள்ள மூன்று தூதர்களுள் இவரும் ஒருவர் ஆவார்.

அதிதூதரான
புனித ரபேல்
அதிதூதரான புனித ரபேல்
ஓவியர்: Bartolomé Esteban Murillo
அதிதூதர்
ஏற்கும் சபை/சமயம்கிறித்தவம்
யூதம்
இசுலாம்
திருவிழாசெப்டம்பர் 29
சித்தரிக்கப்படும் வகைஇளைஞர் ஒருவர் கையில் கோளும் மீனும் ஏந்தியவாறு
பாதுகாவல்மருந்தகர்கள்; குருடர்; உடல் நோய்; மேடிசன் உயர்மறைமாவட்டம்; கண்கோளாருகள்; காதலர்கள்; செவிலியர்கள்; சியாட்டில் உயர்மறைமாவட்டம்; இடையர்கள்; நோயாளிகள்; பயணிகள்; இளையோர்

விவிலியத்தில் கடவுளுடைய முன்னிலையில் பணிபுரியும் ஏழு வானதூதர்களுள் ஒருவர் தாம் என இவரே குறிப்பிடுவதாக உள்ளது.[1] இவரே தோபியாசும் அவர் மருமகள் சாராவும் மன்றாடியபோது அவர்களின் வேண்டுதல்களையும் நற்செயல்களையும் எடுத்துச்சென்று ஆண்டவரின் திருமுன் ஒப்படைதவரும், தோபியாசை சோதிக்க அனுப்பப்பட்டவரும், அவருக்கும் அவரின் மருமகள் சாராவுக்கும் நலம் அருளக் கடவுளால் அனுப்பப்பட்டவரும் ஆவார்.[1]

தூய மிக்கேல் மற்றும் தூய கபிரியேலோடு சேர்ந்து கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் செப்டம்பர் 29 ஆகும்.

மேற்கோள்கள்

  1. தோபித்து நூல் 12:12-15
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.