ராபர்ட் பெல்லார்மின்

புனித ராபர்ட் பெல்லார்மின் (இத்தாலியம்: Roberto Francesco Romolo Bellarmino; 4 அக்டோபர் 1542 – 17 செப்டம்பர் 1621) ஒரு இத்தாலிய இயேசு சபைத் துறவியும், கத்தோலிக்க திருச்சபையின் கர்தினாலும் ஆவார். இவர் கத்தோலிக்க மறுமலர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்தவர்களுல் ஒருவர். இவருக்கு புனிதர் பட்டமளிப்பு 1930இல் திருத்தந்தை பதினொன்றாம் பயஸால் அளிக்கப்பட்டது. அடுத்தவருடமே இவர் திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவிக்கப்பட்டார். இவரின் விழா நாள் 17 செப்டம்பர் ஆகும்.

புனித ராபர்ட் பெல்லார்மின், சே.ச
ஆயர், மறைவல்லுநர்
பிறப்புஅக்டோபர் 4, 1542(1542-10-04)
மோன்தெபுல்சியானோ, இத்தாலி
இறப்பு17 செப்டம்பர் 1621(1621-09-17) (அகவை 78)
உரோமை நகரம், இத்தாலி
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் பட்டம்பதினொன்றாம் பயஸ்-ஆல் 13 மே 1923, உரோமை
புனிதர் பட்டம்பதினொன்றாம் பயஸ்-ஆல் 29 ஜூன் 1930, உரோமை
முக்கிய திருத்தலங்கள்புனித இஞ்ஞாசியார் கோவில், உரோமை நகரம், இத்தாலி
திருவிழா17 செப்டம்பர்; 13 மே (19321969)
பாதுகாவல்பெல்லார்மின் பல்கலைக்கழகம்; ஃபேர் ஃபில்டு பல்கலைக்கழகம்; திருச்சபை அதிகாரிகள்; திருச்சபை சட்ட வழக்குரைஞர்கள்; வேதியர்கள்; சின்சினாடி உயர் மறைமாவட்டம்

கலீலியோவின் வழக்கு

1616இல் திருத்தந்தை ஐந்தாம் பவுலின் ஆணையின் படி கலீலியோ கலிலியின் புத்தகங்கள் தடை செய்யப்படுவதையும் கோப்பர்னிய கொள்கையினை அறிவியலின் படி நிறுவ இயலாவிட்டால் அக்கொள்கையினை கைவிடும்படியாகவும் இவர் கலீலியோவை வற்புறுத்தினார். இதற்கு கலீலியோ இணங்கியதால் அவர் மீது எந்த நடவடிக்கையையும் இவர் எடுக்கவில்லை. ஆயினும் பெல்லார்மினின் இறப்புக்குப் பின்பு 1633இல் கலீலியோ கோப்பர்னிய கொள்கை புத்தகத்தை வெளியிட்டதால் மீண்டும் விசாரிக்கப்பட்டார்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.