திருச்சபையின் மறைவல்லுநர்

திருச்சபையின் மறைவல்லுநர் என்னும் பதம் பல்வேறு திருச்சபைகளால் தனிநபர்களுக்கு வழங்கப்படும் பட்டமாகும். இது அந்த நபர்களின் பங்களிப்பின் (பொதுவாக இறையியலில்) முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்த வழங்கப்படுவதாகும்.

புனித சிவெல்லி நகரின் இசிதோர், 7ஆஅம் நூற்றாண்டில் வாழ்ந்த மறைவல்லுநர்

கத்தோலிக்க திருச்சபையில்

கத்தோலிக்க திருச்சபையில் இப்பட்டம், தன் எழுத்துக்களாலும், சேவையினாலும் கத்தோலிக்க திருச்சபைக்கு பெறும் நன்மை விளைவித்த, கல்வியிலும், புனிதத்திலும் உயர்ந்த நபர்களுக்கு வழங்கப்படும். இந்த மரியாதை மிக அரிதாகவே வழங்கப்படும், அவ்வாறு வழங்கப்படும் போதும், புனிதர் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இது திருத்தந்தையாலோ அல்லது கத்தோலிக்க பொதுச்சங்கங்களினாலோ வழங்கப்படலாம். ஆனாலும் இதுவரை எப்பொதுச்சங்கமும் மறைவல்லுநர் பட்டம் வழங்கியது இல்லை என்பது குறிக்கத்தக்கது.

2011-இன் படி, கத்தோலிக்க திருச்சபை 34 பேரை மறைவல்லுநர்களாக அறிவித்துள்ளது. அவர்களுள் பதினெழுவர் கிழக்கு-மேற்கு திருச்சபைகளின் பிளவின் முக்காலத்தவர்களாதலால் அவர்களை மறைவல்லுநர்களாக கிழக்கு மரபுவழி திருச்சபையும் ஏற்கின்றது. (இவர்கள் கீழே உள்ள பட்டியளில் * குறியிடப்பட்டவர்கள்) மேலும் இப்படியலில் 8 பேர் கிழக்கிலும், 26 பேர் மேற்கிலும் வாழ்ந்தவர்கள். அவர்களுள் 3 பெண்கள் அடங்குவர். அம்மூவருள் அவிலாவின் புனித தெரேசா, லிசியே நகரின் புனித தெரேசா ஆகிய இருவரும் கார்மேல் சபைத் துறவியர் ஆவர். புனித சியன்னா நகர கத்ரீன் அர்ப்பணிக்கப்பட்ட கன்னி ஆவார். மேலும் அவர்களும் 1 திருதொண்டர், 10 குருக்கள், 12 ஆயர்கள், 4 பேராயர்கள் (இவர்களில் ஒருவர் கர்தினால் ஆயர்), 2 மறைமுதுவர், 2 திருத்தந்தையர்களும் அடங்குவர். 25 நபர்கள் ஐரோப்பாவையும், 3 பேர் ஆபிரிக்காவையும், 6 பேர் ஆசியாவையும் சேர்ந்தவர்கள்.

கத்தோலிக்க மறைவல்லுநர்களின் பட்டியல்

பெயர்பிறப்புஇறப்புமறைவல்லுநராக உயர்த்தப்பட்டதுஇனம்பகுப்பு
புனித பெரிய கிரகோரி*54012, மார்ச்சு 6041298இத்தாலியர்திருத்தந்தை
புனித அம்புரோசு*34004, ஏப்ரல் 3971298இத்தாலியர்மிலான் நகரின் ஆயர்
புனித அகஸ்டீன், Doctor Gratiae (Doctor of Grace)*35428, ஆகத்து 4301298வட ஆப்பிரிக்கர் (பூர்வீகம்: இலத்தீன்)ஹிப்போ நகரின் ஆயர்
புனித ஜெரோம்*347 (ca.)30, செப்டம்பர் 4201298தால்மாடியர்குரு, துறவி
புனித யோவான் கிறிசோஸ்தோம்*3474071568சிரியன் (பூர்வீகம்: கிரேக்கர்)கான்ஸ்டன்டினோபிலின் பேராயர்
புனித பெரிய பசீல்*33001, சனவரி 3791568கப்படோசியர் (பூர்வீகம்: கிரேக்கர்)செசேரியாவின் ஆயர்
நசியான் கிரகோரி*32925, சனவரி 3891568கப்படோசியர் (பூர்வீகம்: கிரேக்கர்)கான்ஸ்டன்டினோபிலின் பேராயர்
புனித அத்தனாசியார்*29802, மே 3731568எகிப்தியர் (பூர்வீகம்: கிரேக்கர்)அலெக்சாந்திரியாவின் மறைமுதுவர் (Patriarch)
புனித தாமஸ் அக்குவைனஸ், Doctor Angelicus (Angelic Doctor), Doctor Communis (Common Doctor)122507, மார்ச்சு 12741568இத்தாலியர்குரு, இறையியலாளர், தொமினிக்கன் சபையினர்
புனித போனவெஞ்சர், Doctor Seraphicus (Seraphic Doctor)122115, சூலை 12741588இத்தாலியர்அல்பேனோ நகரின் ஆயர், இறையியலாளர், பிரான்சிஸ்கன் சபையினர்
புனித அன்சலேம், Doctor Magnificus (Magnificent Doctor)1033 or 103421, ஏப்ரல் 11091720இத்தாலியர்கேன்டர்பரி நகரின் பேராயர், ஆசீர்வதப்பர் சபையினர்
செவேலி நகர புனித இசிதோர்*56004, ஏப்ரல் 6361722எசுபானியர்செவேலி நகரின் ஆயர்
புனித பீட்டர் கிறிசோலோகு*4064501729இத்தாலியர்ரவேனா நகரின் ஆயர்
புனித பெரிய லியோ*40010, நவம்பர் 4611754இத்தாலியர்திருத்தந்தை
புனித பீட்டர் தமியான்100721, பெப்ரவரி 10721828இத்தாலியர்ஓஸ்தியா நகரின் கர்தினால் ஆயர், துறவி, ஆசீர்வதப்பர் சபையினர்
கிலேரிவாக்ஸ் நகர புனித பெர்நாது, Doctor Mellifluus (Mellifluous Doctor)109021, ஆகத்து 11531830பிரெஞ்சு நபர்குரு, O.Cist.
போய்டிலர்ஸ் நகர புனித ஹிலாரி*3003671851பிரெஞ்சு நபர்போய்தியர் நகரின் ஆயர்
புனித அல்போன்சுஸ் லிகோரி, Doctor Zelantissimus (Doctor Most Zealous)169601, ஆகத்து 17871871இத்தாலியர்சான்தா ஆகத்தா தே கோதி மரைமாவட்ட ஆயர், இரட்சகர் சபையின் நிறுவனர்
புனித பிரான்சிசு டி சேல்சு, Doctor Caritatis (Doctor of Charity)156728, திசம்பர் 16221877பிரெஞ்சு நபர்செனிவா நகரின் ஆயர்
அலெக்சாந்திரியா நகர புனித சிரில், Doctor Incarnationis (Doctor of the Incarnation)*37627, சூலை 4441883எகிப்தியர்அலெக்சாந்திரியாவின் மறைமுதுவர்(Patriarch)
எருசலேம் நகரின் புனித சிரில்*3153861883எருசலேம்எருசலேமின் ஆயர்
தமாஸ்கஸ் நகர புனித யோவான்*67605, திசம்பர் 7491883சிரியன்குரு, துறவி
வணக்கத்திற்குரிய புனித பீட்*67227, மே 7351899ஆங்கிலேயர்குரு, துறவி
புனித எபிரேம்*3063731920சிரியன்திருத்தொண்டர்
புனித பீட்டர் கனிசியு152121, திசம்பர் 15971925டச்சி நபர்இயேசு சபை குரு
சிலுவையின் புனித யோவான், Doctor Mysticus (Mystic Doctor)154214, திசம்பர் 15911926எசுபானியர்குரு, ஆன்ம ஞானி, கர்மேல் சபையின் நிறுவனர்
புனித ராபர்ட் பெல்லார்மின்154217, செப்டம்பர் 16211931இத்தாலியர்கபுஅ நகரின் பேராயர், இறையியலாளர், இயேசு சபையினர்
புனித பெரிய ஆல்பர்ட், Doctor Universalis (Universal Doctor)119315, நவம்பர் 12801931செருமானியர்ரேகின்ஸ்பர்க் நகரின் ஆயர், இறையியலாளர், தொமினிக்கன் சபையினர்
பதுவை மற்றும் லிஸ்பன் நகரின் புனித அந்தோனியார், Doctor Evangelicus (Evangelizing Doctor)119513, சூன் 12311946போர்த்துகேயர்குரு, பிரான்சிஸ்கன் சபையினர்
பிரின்டிசி நகர புனித லாரன்சு, Doctor Apostolicus (Apostolic Doctor)155922, சூலை 16191959இத்தாலியர்குரு, திருப்பீட தூதுவர், பிரான்சிஸ்கன் சபையினர்
அவிலாவின் புனித தெரேசா151504, அக்டோபர் 15821970எசுபானியர்இறைக்காட்சியாளர், கர்மேல் சபையின் நிறுவனர்
சியன்னா நகர புனித கத்ரீன்134729, ஏப்ரல் 13801970இத்தாலியர்இறைக்காட்சியாளர், தொமினிக்கன் சபையினர், அர்ப்பணிக்கப்பட்ட கன்னியர்
லிசியே நகரின் புனித தெரேசா, Doctor Amoris (Doctor of Love)187330, செப்டம்பர் 18971997பிரெஞ்சு நபர்கர்மேல் சபைக் கன்னியர்
அவிலா நகரின் புனித யோவான்150010, மே 15692012எசுபானியர்குரு
பிங்கெனின் புனித ஹில்டெகார்ட்109817, செப்டம்பர் 11792012செருமானியர்பெனடிக்டன் துறவி, இசையமைப்பாளர், ஆதீனத்தலைவர்
புனித நாரெக் நகரின் கிரகோரி[1]9511003பெப்ரவரி 23, 2015துறவி, கவிஞர், மெய்யியலாளர், இறையியலாளர்

லுதரன் திருச்சபையில்

மறைவல்லுநர் (Doctor of the Church) என்னும் பதத்தை லுதரன் திருச்சபையினர் பயன் படுத்துவதில்லை. அவர்களின் திருவழிபாப்பி ஆண்டு அட்டவணையிலே Doctor என்னும் பதம் மார்ட்டின் லூதருக்கு வழங்கப்படும் போது, அது அவர் பெற்ற முனைவர் பட்டத்தையே குறிக்கும்.

மேற்கோள்கள்

  1. McCarthy, Emer. "Pope Francis declares Armenian saint Doctor of the Church". Vatican Radio. பார்த்த நாள் பெப்ரவரி 23, 2015.
  • Holweck, F. G., A Biographical Dictionary of the Saint. St. Louis, MO: B. Herder Book Co. 1924.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.