பொலிகார்ப்பு

பொலிகார்ப்பு (கிரேக்க மொழி: Πολύκαρπος Polýkarpos; கி.பி 69–155) என்பவர் 2ஆம் நூற்றாண்டில் வழ்ந்த சிமைரனா நகரின் கிறித்தவ ஆயராவார்.[1] பொலிகார்ப்புவின் மறைசாட்சியம் என்னும் நூலின் படி, இவரை உயிருடன் தீயிட்டு கொளுத்த முயன்றபோது அது பயனளிக்காததால், கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டார்.[2] கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கம் மற்றும் லூதரனியம் இவரை புனிதர் என ஏற்கின்றது.

புனித பொலிகார்ப்பு
புனித பொலிகார்ப்பு
ஆயர், மறைசாட்சி, திருச்சபை தந்தையர், சிமைரனா நகரின் ஆயர்
பிறப்புகி.பி 69
இறப்புகி.பி 155
சிமைரனா
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்க திருச்சபை,
கிழக்கு மரபுவழி திருச்சபை,
ஆங்கிலிக்க ஒன்றியம்,
லூதரனியம்
திருவிழாபெப்ரவரி 23 (முன்னர் ஜனவரி 26)
சித்தரிக்கப்படும் வகைபாலியம் அணிந்தவாரு ஒரு நூலினை ஏந்தியவாறு
பாதுகாவல்காது வலியால் அவதியுறுவோர், இரத்தக்கழிசல்
குறிப்பிடத்தகுந்த படைப்புகள்பொலிகார்ப்பு பிலிப்பியகளுக்கு எழுதிய திருமுகம்

இவரை திருத்தூதர் யோவானின் சீடர் என இரனேயு மற்றும் திர்துலியன்[3] ஆகியோர் குறிக்கின்றனர்.[4][5] புனித ஜெரோம் பொலிகார்ப்பு யோவானின் சீடர் என்றும், யோவானே இவரை சிமைரனா நகரின் ஆயராக திருப்பொழிவு செய்தார் எனவும் கூறியுள்ளார்.

உரோமையின் கிளமெண்ட் மற்றும் அந்தியோக்கு இஞ்ஞாசியாரோடு, புனித பொலிகார்ப்பும், அப்போஸ்தலிக்க தந்தையர்களுள் (Apostolic Fathers) மிக முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். இவரால் எழுதப்பட்டதாக தற்போது உள்ள ஒரே ஆவணம் பொலிகார்ப்பு பிலிப்பியர்களுக்கு எழுதிய திருமுகம் ஆகும். இதனை முதன்முதலில் குறித்தவர் இரனேயு ஆவார்.

மேற்கோள்கள்

  1. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் Saint Polycarp
  2. Henry Wace, Dictionary of Christian Biography and Literature to the End of the Sixth Century A.D., with an Account of the Principal Sects and Heresies, s.v. "Polycarpus, bishop of Smyrna".
  3. Tertullian, De praescriptione hereticorum 32.2
  4. Polycarp, The Catholic Encyclopedia, 1913.
  5. Irenaeus, Adversus Haereses III.3.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.