தாமஸ் மோர்
சர் தாமஸ் மோர் (/ˈmɔːr/; 7 பெப்ரவரி 1478 – 6 ஜூலை 1535), அல்லது கத்தோலிக்கர்களால் புனித தாமஸ் மோர்,[1][2] என்று அழைக்கப்படுபவர் ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரும், தத்துவவியலாளரும், எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். ஐரோப்பிய மறுமலர்ச்சியில் இவர் குறிக்கத்தக்க பங்கு வகித்தவர். இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் முக்கிய ஆலோசகராக இருந்த இவர் அக்டோபர் 1529 முதல் 16 மே 1532 வரை இங்கிலாந்தின் உயராட்சித் தலைவராகப் பணியாற்றினார்.[3] மார்ட்டின் லூதர் மற்றும் வில்லியம் டின்டேல் முதலியோரால் கொணரப்பட்ட கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தினை இவர் வன்மையாக எதிர்த்தார். அரசியல் சமுதாய முறைகளில் இலக்கியல் வாழ்வுடை கற்பனைத் தீவு பற்றி ஒரு நூலினை 1516ஆம் ஆண்டு Utopia என்னும் பெயரில் வெளியிட்டார்.
பெரு மதிப்பிற்குறிய சர் தாமஸ் மோர் | |
---|---|
![]() | |
உயராட்சித் தலைவர் | |
பதவியில் அக்டோபர் 1529 – மே 1532 | |
அரசர் | இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி |
முன்னவர் | தாமஸ் வோல்சி |
பின்வந்தவர் | தாமஸ் ஆடிலி |
லேன்காஸ்டர் மாவட்ட ஆளுநர் | |
பதவியில் 31 டிசம்பர் 1525 – 3 நவம்பர் 1529 | |
அரசர் | எட்டாம் ஹென்றி |
முன்னவர் | இரிச்சர்டு விங்ஃபீர்ட் |
பின்வந்தவர் | வில்லியம் ஃபிட்சுவில்லியம் |
இங்கிலாந்து பேரரசின் கீழவையின் அவைத்தலைவர் | |
பதவியில் 16 ஏப்ரல் 1523 – 13 ஆகஸ்ட் 1523 | |
அரசர் | இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி |
முன்னவர் | தாமஸ் நிவேலி |
பின்வந்தவர் | தாமஸ் ஆடிலி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 7 பெப்ரவரி 1478 இலண்டன் நகரம், இலண்டன், இங்கிலாந்து இராச்சியம் |
இறப்பு | 6 சூலை 1535 57) Tower Hill, Liberties of the Tower of London, Tower Hamlets இங்கிலாந்து இராச்சியம் | (அகவை
அடக்க இடம் | புனித பேதுரு ஆலயம், இலண்டன் கோபுரம், இலண்டன், ஐக்கிய இராச்சியம் 51.508611°N 0.076944°W |
வாழ்க்கை துணைவர்(கள்) | ஜேன் கிலோட் (தி. 1505) ஆலிஸ் மிடில்டன் (தி. 1511) |
பிள்ளைகள் | மார்க்ரெட் எலிசபெத் சிசிலி ஜான் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
கையொப்பம் | ![]() |
பின்னாட்களில் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து இங்கிலாந்து அரசர் பிரிந்ததும் அவரை இங்கிலாந்து திருச்சபையின் தலைவராக ஏற்க மறுத்தார். திருச்சபையின் தலைவர் பதவி திருத்தந்தைக்கே உரியது எனவும் திருத்தந்தையின் அனுமதியில்லாமல் ஆன் பொலினை அரசர் மணப்பது தவறு அன்றும் இவர் கூறினார். இதனால் இவர் அரசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு தலை வெட்டிக்கொல்லப்பட்டார்
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் இவரை ஒரு மறைசாட்சி என 1935இல் புனிதர் பட்டம் அளித்தார்; திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 2000இல் இவரை அரசியல்வாதிகளுக்கும், அரசுத்தலைவர்களுக்கும் பாதுகாவலராக அறிவித்தார்.[4] 1980 முதல், இங்கிலாந்து திருச்சபை இவரை மறைசாட்சியாக வணங்குகின்றது.[5] 2002இல் பிபிசி நடத்திய கருத்துக்கணிப்பில் இவர் 100 பெரிய பிரித்தானியர்கள் (100 Greatest Britons) பட்டியலில் 37ஆம் இடத்தைப்பெற்றார்.[6]
மேற்கோள்கள்
- St. Thomas More, 1478–1535 at Savior.org
- Homily at the Canonization of St. Thomas More at The Center for Thomas More Studies at the University of Dallas, 2010, citing text "Recorded in The Tablet, ஜூன் 1, 1935, pp. 694–695"
- Linder, Douglas O. The Trial of Sir Thomas More: A Chronology at University Of Missouri-Kansas City (UMKC) School Of Law
- Apostolic letter issued motu proprio proclaiming Saint Thomas More Patron of Statesmen and Politicians, 31 October 2000 Vatican.va
- "Holy Days". Worship – The Calendar. இங்கிலாந்து திருச்சபை (2011). பார்த்த நாள் 20 ஏப்ரல் 2011.
- Sue Parrill, William Baxter Robison (2013). "The Tudors on Film and Television", p. 92. McFarland,
அரசியல் பதவிகள் | ||
---|---|---|
முன்னர் தாமஸ் நிவேலி |
இங்கிலாந்து கீழவையின் அவைத்தலைவர் Speaker of the House of Commons 1523 |
பின்னர் தாமஸ் ஆடிலி |
முன்னர் இரிச்சர்டு விங்ஃபீர்ட் |
லேன்காஸ்டர் மாவட்ட ஆளுநர் Chancellor of the Duchy of Lancaster 1525–1529 |
பின்னர் வில்லியம் ஃபிட்சுவில்லியம் |
முன்னர் தாமஸ் வோல்சி |
உயராட்சித் தலைவர் 1529–1532 |
பின்னர் தாமஸ் ஆடிலி |