இலண்டன் கோபுரம்

மேன்மை தாங்கிய அரசியின் அரண்மனை மற்றும் கோட்டை அல்லது பொதுவாக இலண்டனின் கோபுரம் என அறியப்படும் இது மத்திய இலண்டன், இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையாகும். இதனை வடிவமைத்தவர், நோர்மன் துறவியும், தேவாலயம் மற்றும் கோட்டைகள் கட்டுவதில் புகழ்பெற்ற குண்டல்ப் ஆவார்.[3] இது இலண்டன் நகரத்தில் உள்ள கோபுர ஹம்லெட் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இலண்டன் மாநகரத்தின் கிழக்கு முனையில் இருந்து கோபுர மலை எனப்படும் திறந்தவெளியால் பிரிக்கப்பட்டுள்ளது. இது 1066 ன் இறுதியில் நார்மனின் இங்கிலாந்து வெற்றியின் ஒரு பகுதியாக ஆரம்பிக்கப்பட்டது.

இலண்டன் கோபுரம்
இலண்டன் கோபுரம் தேம்சு நதியிலிருந்து பார்க்கும்போது
அமைவிடம்இலண்டன், ஐக்கிய இராச்சியம்
ஆள்கூற்றுகள்51°30′29″N 00°04′34″W
Areaகோட்டையகம்: 12 ஏக்கர்
கோபுர தளை: 6 ஏக்கர்
உயரம்வெள்ளைக் கோபுர உச்சி: 27 m
கட்டப்பட்டதுவெள்ளைக் கோபும்: 1078
உள்ளக வட்டம்: 1190s
மீள்கட்டமைப்பு: 1285
துறை விரிவாக்கம்: 1377–1399
கட்டிடக்கலைஞர்குண்டல்ப்
பார்வையாளர்களின் எண்ணிக்கை2,444,296 (2012) [1] (இல் 2011)[2]
Location of the Tower of London in central London

உசாத்துணை

  1. Association of Leading Visitor Attractions data
  2. Historic Royal Palaces 2011 Annual Report, Historic Royal Palaces, p. 37, http://www.hrp.org.uk/Resources/AR_WEB_2011_2.pdf, பார்த்த நாள்: 2011-09-30
  3. Hibbert, Christopher (1971). Tower of London. New York: Newsweek. பக். 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-88225-002-1.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.