கோட்டை

கோட்டை என்பது பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கட்டப்படும் கட்டிடத் தொகுதியாகும். இக்காலத்தில் இவ்வாறான தேவைகளுக்காகக் கட்டப்படும் கட்டிடங்களைக் கோட்டை என்று சொல்வதில்லை. கோட்டைகள் அரண் செய்யப்பட்ட கட்டிடங்கள் ஆகும்.

போர்டாங்கே (Bourtange) நட்சத்திர வடிவக் கோட்டை, 1750 ல் இருந்தவாறு மீளமைக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டில் உள்ளது.
செவல்லர்சு கோட்டை, சிரியா உலகின் பாதுகாக்கப்பட்ட கோட்டைகளில் ஒன்று[1]

அரசர்கள் முதலிய முக்கிய மனிதர்களையும் முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகளையும் பாதுகாப்பதற்காகவே கோட்டைகள் கட்டப்பட்டன. சில கோட்டைகளுள் முக்கியமானவர்களின் தங்குமிடங்களும், போர்வீரர்களுக்கான வசதிகளும், சில அரச அலுவலகங்களும் மட்டுமே அமைந்திருக்க வேறு சில கோட்டைகள் நகரங்களையே அவற்றுள் அடக்கியிருந்தன. எதிரிகள் கடப்பதற்குக் கடினமாக இருப்பதற்காக கோட்டைகள் உயர்ந்த மதில்களைக் கொண்டிருந்தன. அந்த மதில்களில் ஆங்காங்கே போர்வீரர்கள் இருந்து சுற்றாடலைக் கண்காணிப்பதற்கான காவற்கோபுரங்கள் அமைந்திருக்கும். இம்மதில்களினதும் காவற்கோபுரங்களினதும் வடிவமைப்பு, கோட்டை எதிரிகளினால் தாக்கப்படும்போது இலகுவாக எதிர்த் தாக்குதல் நடத்த வசதியான முறையில் அமைந்திருக்கும். கோட்டை மதிலில் முக்கியமான இடங்களில் மட்டும் வாசல்கள் அமைந்திருக்கும். இவையும் உறுதியான கதவுகளினால் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

இந்தியா, புதுடில்லியிலுள்ள செங்கோட்டை.

கோட்டைகள் பல ஆழமான அகழிகளினால் சூழப்பட்டிருப்பதும் உண்டு. கோட்டை வாயிலை அணுகுவதற்காக அகழிக்குக் குறுக்கே பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கும். தேவையேற்படும் போது இப் பாலங்களை எடுத்துவிடக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டிருக்கும்.

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.