அரண்மனை

அரண்மனை (pronunciation ) (palace) என்பது பொதுவாக மன்னரின் வாழ்விடம் ஆகும். சொற்பிறப்பியல் அடிப்படையில் இச்சொல் அரண் (பாதுகாப்பு) மற்றும் மனை (உறையுள்) ஆகியவற்றின் புணர்ச்சியாகும். அரசனின் இருப்பிடம் என்று பொருள்படும் அரமனை என்ற சொல்லும் உண்டு.

எட்டயபுரத்தில் உள்ள அரண்மனை.

அரண்மனைகள் எதிரி நாட்டவரிடம் இருந்து மன்னரைக் காக்கும் பொருட்டு மிக்க பாதுகாப்புடன் கட்டப்படுவன. கோட்டைகளாலும், கண்காணிப்புக் கோபுரங்களாலும், சில நேரங்களில் அகழிகளாலும் சூழப்பட்டிருக்கும். அரசருக்கும், அரசிக்கும் மிக்க வசதிகள் நிறைந்த இருப்பிடம், உவளகம், அவர்கள் உலாவ பூந்தோட்டம், அமைச்சர்களுடனும், பிற அவையோருடனும் கலந்துரையாடவும், நீதி வழங்கவும் அரசவை போன்ற பகுதிகள் அரண்மனைகளின் உள்ளே இருக்கும்.

மேலும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.