மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல்

தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் என மேற்கிலும் மிகவும் தூய இறையன்னை கோவிலுக்குள் நிழைந்தது என கிழக்கிலும் அறியப்படுவது நவம்பர் 21இல் கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளின் கொண்டாடப்படும் கிறித்தவ விழாவாகும்.[1]

The Presentation of the Virgin in the Temple, Willem Vrelant

இந்த நிகழ்வு புதிய ஏற்பாட்டில் விவரிக்கப்படாத ஒன்றாகும். ஆயினும் இறையேவுதல் உடையது என ஏற்கப்படாத யாக்கோபு நற்செய்தியில் (Gospel of James) இந்நிகழ்வு விவரிக்கப்படுள்ளது. முதிர்ந்த வயதான யோவாக்கிம் மற்றும் அன்னா குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தனர். வானதூதர் வழியாக மரியாவின் பிறப்பை அறிந்து கடவுளுக்கு நன்றியாக பிறக்கப் போகும் குழந்தையை எருசலேம் கோவிலில் கடவுளுக்கு அர்ப்பணிப்பதாக நேர்ந்து கொண்டனர் என இன்னூல் விவரிக்கின்றது. மரியாவின் பிறப்பு நற்செய்தி (Gospel of the Nativity of Mary) போன்ற இந்நிகழ்வின் பிற்கால விவரிப்புகளில் மரியாவின் மூன்றாம் வயதில் இந்த நிகழ்வு நடந்ததாக குறிக்கின்றது. மரியா கல்வி கற்கவும் கடவுளின் தாயாகும் நிலைக்கு தன்னை தயாரிக்கவும் ஆயலத்திலேயே இருந்தார் என மரபுப்படி நம்பப்படுகின்றது.

கிழக்கு திருச்சபைகளின் மரபில் மரியா (கிரேக்கத்தில் Μαρία) அல்லது தேஸ்போயினா (கிரேக்கத்தில் "Δέσποινα") என்னும் பெயருடைய பெண்கள் தங்களின் பெயர் கொண்ட புனிதர் விழாவை (feast day/name day) கொண்டாடும் நாட்களின் இவ்விழா நாளும் ஒன்று.

கலையில்

கலையில் இந்த நிகழ்வை பொதுவாக மரியா தனது பெற்றோரைப் பிரிந்து தனியாக ஆலயப் படிகளில் ஏறி தலைமை குருவை நோக்கி செல்வதைப்போல சித்தரிப்பர்.

மேற்கோள்கள்

  1. யூலியன் நாட்காட்டியினை பின்பற்றும் பிரிவுகளில் நவம்பர் 21ஆன கிரெகொரியின் நாட்காட்டியின் டிசம்பர் 4இல் கொண்டாடப்படுகின்றது.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.