எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்

எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல் என்பது விவிலியத்தின் மத்தேயு நற்செய்தி 2:13-23 முடிய விவரிக்கப்படும் ஒரு நிகழ்வாகும். இதில் ஞானிகள் குழந்தை இயேசுவை வணங்கிவிட்டு திரும்பிச் சென்றபின், யோசேப்புவும் அவர் மனைவி மரியாவும் குழந்தையாயிருந்த இயேசு கிறித்துவேடு எகிப்து நாட்டிக்கு தப்பி ஓடிச் சென்றனர். ஏனெனில் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான் என எச்சரித்தார். ஏரோது இறக்கும்வரை அவர்கள் அங்கேயே இருந்தார். இவ்வாறு, எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன் என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது என மத்தேயு நற்செய்தியாளர் குறிக்கின்றார்.

எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல் இரஷ்ய திருவோவியம்; படத்தின் கிழ்பகுதியில் வேற்று இன தெய்வ சிலைகள் உடைவது சித்தரிக்கப்படுள்ளது (17ம் நூற்றாண்டு).
எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல் ஓவியர்: Giotto di Bondone (1304-06, Scrovegni Chapel, பதுவா, இத்தாலி)
நற்செய்திகளின்படி
இயேசுவின் வாழ்வு

கிறித்தவம் portal

விவிலியம் portal

இன்நிகழ்வுவைப்பற்றி பல செவிவழியாக பாரம்பரியக்கதைகளும் பல உள்ளன. குழந்தை இயேசு எகிப்துக்குள் நுழைந்த போது அங்கிருந்த வேற்று இன தெய்வ சிலைகள் உடைந்ததாகவும், குழந்தையாக நோயுற்றிருந்த இருந்த நல்ல கள்வனையும் அவரின் தாயையும் மரியா சந்தித்தது அடைக்களம் பெற்றதாகவும், குழந்தை இயேசு குளித்த நீநில் நல்ல கள்வனையும் குளிக்கச்செய்து அவரின் நோய் நீங்கியதாகவும் கதைகள் உள்ளன. மேலும் எகிப்துக்குப்போகும் வழியில் பலரை சந்தித்ததாகவும் கூறப்படுகின்றது. அவர்களுல் புனித அப்ரோடிசியுசு[1] குறிப்பிடத்தக்கவர் ஆவார். ஆயினும் இவற்றிக்கு எவ்வித விவிலிய ஆதாரமும் இல்லை.

இன்நிகழ்வே பொதுவாக இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் கலை முறையின் இறுதிக்காட்சி ஆகும். மேலும், மரியா மற்றும் குழந்தை இயேசுவின் வாழ்வின் சித்தரிப்பில் மிக முக்கியமான கருப்பொருளாகவும் உள்ளது.

மேற்கோள்கள்

  1. St. Aphrodisius - Catholic Online
எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்
Life of Jesus
முன்னர்
விவிலிய ஞானிகள்
புதிய ஏற்பாடு
நிகழ்வுகள்
பின்னர்
மாசில்லா குழந்தைகள் படுகொலை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.