இடையர்கள் குழந்தை இயேசுவை காணுதல்

இடையர்கள் குழந்தை இயேசுவை காணுதல் (ஆங்கிலம்:Adoration of the shepherds) என்பது திருவிவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் பிறப்பிற்குப் பின் நடந்த நிகவாகும். இது இயேசு பிறந்ததை வானதூதர் இடையர்களுக்குத் தோன்றி அறிவித்ததன்பின், அவர்கள் குழந்தை இயேசுவைக் கண்டு வணங்கிய நிகழ்வாகும்.

நற்செய்திகளின்படி
இயேசுவின் வாழ்வு

கிறித்தவம் portal

விவிலியம் portal

விவிலிய குறிப்பு

குழந்தை இயேசுவைக் காணும் இடையர்கள்

இது திருவிவிலியத்தின் லூக்கா நற்செய்தியில் 2 ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (லூக்கா 2:8-20). அவ்வதிகாரத்தில் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்களுக்கு வானதூதர் தோன்றி "ஆண்டவராகிய மெசியா தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார், குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்" எனக் கூறினார் என்றும், இதைக் கேட்ட அவர்கள் அக்குழந்தையை காண சென்று வணங்கி கடவுளைப்போற்றினர் என குறிப்பிடப்பட்டுள்ளது.[1][2]

குடிலில் இந்நிகழ்வின் சித்தரிப்பு

கிறித்துமஸ் குடிலில் குழந்தை இயேசு, மரியாள், யோசேப்பு, தேவதூதர்கள், மூன்று அரசர்கள் ஆகியோருடன் இடையர்களையும் அவர்களுடைய கிடையையும் காட்சிப்படுத்துவது வழக்கமான ஒன்றாகும்.[3]

ஆதாரங்கள்

  1. Robert H. Gundry, A Survey of the New Testament (4th ed., Grand Rapids: Zondervan, 2003), 218.
  2. The Cyber Hymnal: Come, All Ye Shepherds
  3. Dues, Greg.Catholic Customs and Traditions: A Popular Guide Twenty-Third Publications, 2000.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.