யூத்திகு

யூத்திகு (ஆங்கிலம்:Eutychus) என்பவர் துரோவா நகரினைச்சேர்ந்த இளைஞர் ஆவார். இவர் பவுல் பேசுவதைக்கேட்க வந்தோருள் ஒருவர். பவுல் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தபோது இவர் அயர்ந்து தூங்கியதால் மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்தார். அங்கு இருந்தோர் இவரை பிணமாகத் தூக்கி எடுத்தார்கள்.[1] பவுல் கீழே இறங்கி வந்து அவர் மீது படுத்து அணைத்துக்கொண்டு, "அமளியை நிறுத்துங்கள்: இவர் உயிரோடுதானியிருக்கிறார்" என்று கூறினார். இந்த நிகழ்வு புதிய ஏற்பாட்டின் திருத்தூதர் பணிகள் நூலில் 20:9-12இல் விவரிக்கப்படுள்ளது..

பவுல் யூத்திகுவை உயிர்பெற்றச்செய்தல், 1728.

இந்த நிகழ்வின் விவரிப்பில் இவர் இறந்தாரா அல்லது மயக்கமடைந்தாரா என்பது குறித்து மொழிபெயர்ப்பாளரிடையே ஒத்த கருத்தில்லை.[2][3]

யூத்திகு என்னும் பெயருக்கு ஆகூழ் என்பது பொருள்.

இந்தநிகழ்வு ஓமரின் கதைகளில் குறிப்பாக ஒடிசியில் வரும் நிகழ்வோடு அதிகம் ஒத்திருப்பதால் இதன் நம்பகத்தன்மையினை பலர் கேள்விக்குள்ளாகியுள்ளனர்.[4]

மேற்கோள்கள்

  1. Arndt, William & Gingrich, F. W. (1967), Greek-English Lexicon of the New Testament (University of Chicago Press).
  2. The Case of Eutychus
  3. Eutychus (WebBible Encyclopedia)
  4. Luke's Eutychus and Homer's Elpenor

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.