பத்மு யோவான்

பத்மு யோவான் என்பது தற்கால அறிஞர்கள் புதிய ஏற்பாட்டின் இறுதி நூலான திருவெளிப்பாடு நூலின் ஆசிரியருக்கு அளிக்கும் பெயராகும். இந்நூலே இதன் ஆசிரியர் பெயர் யோவான் எனவும் அவர் கிரேக்க தீவுகளுல் ஒன்றான பத்முவில் வசிப்பதாகவும் எனக்குறிக்கின்றது. இதனால் சில அறிஞர்கள் இவர் தோமிசியன் துவங்கிய கிறித்தவ துன்புறுத்தல்களின் காலத்தில் பத்மு தீவுக்கு நாடுகடத்தப்பட்டவர் என நம்புகின்றனர்.[1][2]

பத்மு தீவில் புனித யோவான்

மரபுப்படி திருத்தூதர் யோவானே இந்நூல், யோவான் நற்செய்தி, மற்றும் யோவானின் முதல், இரண்டாம், மற்றும் மூன்றாம் திருமுகங்களின் ஆசிரியராகக் கருதப்படுகின்றார். இன்னூலின் ஆசிரியர் தாம் ஒரு திருத்தூதர் என்றோ இயேசுவின் சீடர் என்றோ அவர் தம்மைப் பற்றிக் கூறிக் கொள்ளவில்லை. மொழி நடை, இலக்கணம், இறையியல், கருத்துக்கள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தால் இது யோவான் நற்செய்தியை எழுதிய ஆசிரியரால் எழுதப்பட்டிருக்க இயலாது என்பர். தொடக்க காலத்திலிருந்தே கிறிஸ்தவ எழுத்தாளர்கள் இந்நூலின் ஆசிரியர் திருத்தூதர் யோவானே என்று கூறி வந்திருப்பதால் இந்நூலாசிரியர் யோவான் என்னும் பெயருடைய தொடக்க கால மூப்பர் ஒருவராய் இருந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. இம்மூப்பரே பத்மு யோவான் என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றார்.[3][4]

மேற்கோள்கள்

  1. Souvay, Charles. "Patmos." The Catholic Encyclopedia. Vol. 11. New York: Robert Appleton Company, 1911. 12 Jan. 2009
  2. Phillips, J. B. "Book 27 - Book of Revelation" (12 ஜனவரி 1962). People, Places, Customs, Concepts, Journeys - the New Testament with integrated notes and maps 1962.
  3. Stephen L Harris, Understanding the Bible, (Palo Alto: மேfield, 1985), 355
  4. Bart D. Ehrman (2004). The New Testament: A Historical Introduction to the Early Christian Writings. New York: Oxford. பக். 468. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-515462-2.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.