தொற்கா

தொற்கா (கிரேக்கம், அரமேயத்தில் தபித்தா) என்பவர் யோப்பா நகரில் வாழ்ந்த கிறித்தவரும் திருத்தூதர் பணிகள் நூலில் குறிக்கப்படும் நபரும் ஆவார்.[1][2] அக்குறிப்பின்படி இவர் நன்மை செய்வதிலும் இரக்கச் செயல்கள் புரிவதிலும் முற்றிலும் ஈடுபட்டிருந்தார். உடல்நலம் குன்றி ஒருநாள் இவர் இறந்துவிட்டார்.

தொற்கா மீண்டும் உயிர் பெறுதல். ஓவியர்: Masolino da Panicale, 1425.

அங்கிருந்த சீடர்கள் யோப்பாவிற்கு அருகிலுள்ள லித்தாவுக்குப் பேதுரு வந்திருப்பதைக் கேள்விப்பட்டு இருவரை அவரிடம் அனுப்பி, எங்களிடம் உடனே வாருங்கள் என்று கெஞ்சிக் கேட்டார்கள். பேதுரு வந்து அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு முழந்தாள்படியிட்டு இறைவனிடம் வேண்டினார்: அவரது உடலின் பக்கமாகத் திரும்பி, தபித்தா, எழுந்திடு என்றார். உடனே அவர் கண்களைத் திறந்து பேதுருவைக் கண்டு, எழுந்து உட்கார்ந்தார்.

இவ்விவரிப்பின்படி இவரும் கைம்பெண்னாக இருந்திருக்கக்கூடும்[3][4] என்றும் ஏழை எளியோருக்கு உதவியதால் இவர் செல்வந்தராகவும் இருந்திருக்கக்கூடும்[5] என்றும் அறியலாம். மேலும் இவர் யோப்பா நகரின் குறிக்கத்தக்க நபராக இருந்திருக்கக்கூடும்.[5][6] இதனாலேயே பேதுருவும் அழைக்கப்பட்டிருக்கலாம்.

தொற்கா என்னும் கிரேக்கப்பெயர் அரமேயத்தில் தபித்தா என்று வழங்கப்படுகின்றது. இதற்கு பெண் மான் என்பது பொருள்.[7][6] இப்பெயரின் தற்போது மான் வகை ஒன்று (Dorcas gazelle) அழைக்கப்படுகின்றது என்பது குறிக்கத்தக்கது.[8]

கிறித்தவ மரபில்

கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி மற்றும் லூத்தரன் திருச்சபையில் அக்டோபர் 25.[9][10] செசாரியா நகர பசீல் இவரை ஒரு எடுத்துக்காட்டாக தனது எழுத்துகளில் குறிப்பிட்டுள்ளார்.[11]

கலையில்

இவரின் சித்தரிப்புகள் நான்காம் நூற்றாண்டு முதலே கிடைத்துள்ளன. புனித பேதுருவின் வாழ்வை சித்தரிக்கும் இடங்களில் இவர் உயிர்ப்பிக்கப்படும் நிகழ்வும் குறிக்கப்படுகின்றது. குறிப்பாக மறுமலர்ச்சிகால கலை மற்றும் மத்தியகால கலை ஆகியவற்றில் இவை அதிகம் சித்தரிக்கப்பட்டன.[12][13]

மேற்கோள்கள்

  1. 9:36–42
  2. Syswerda, Jean E. (2002). Women of the Bible:52 Bible studies for individuals and groups. Grand Rapids, Mich.: Zondervan. பக். 214. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0310244927.
  3. Bock, Darrell L. (2007). Acts (Baker Exegetical Commentary on the New Testament). Baker Books. பக். 378. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1441200266. http://books.google.com/books?id=smkvXcfFBBwC&pg=PA378.
  4. Gangel, Kenneth O. (1998). Holman New Testament Commentary - Acts. B&H Publishing Group. பக். 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0805402055. http://books.google.com/books?id=s_rs-CRacHYC&pg=PA146.
  5. Witherington, Ben (1998). The Acts of the Apostles: A Socio-rhetorical Commentary. Wm. B. Eerdmans. பக். 331–332. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0802845010. http://books.google.com/books?id=2P7zSnM9BjMC&pg=PA331.
  6. Lockyer, Herbert (1967). All the women of the Bible. Grand Rapids: Zondervan. பக். 46–48. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0310281512. http://books.google.com/books?id=0YrW3bxxGAsC&pg=PA46.
  7. திருத்தூதர் பணிகள் 9:36, பொது மொழிபெயர்ப்பின் அடிக்குறிப்பு
  8. Hildyard, Anne [ed.] (2001). Endangered wildlife and plants of the world. New York [u.a.]: Marshall Cavendish. பக். 606. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0761471944.
  9. Kinnaman, Scot A. (2010). Lutheranism 101. St. Louis: Concordia Publishing House. பக். 278. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780758625052.
  10. Sheehan, Thomas W. (2001). Dictionary of Patron Saints' Names. Our Sunday Visitor Publishing. பக். 268. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0879735392.
  11. Basil, Saint (1999). Ascetical Works. CUA Press. பக். 191. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0813211093. http://books.google.com/books?id=F4GRmOIddMgC&pg=PA191.
  12. Ross, Leslie (1996). Medieval Art: A Topical Dictionary. Greenwood Publishing Group. பக். 239. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0313293295. http://books.google.com/books?id=b-5YPoia7qwC&pg=PA239.
  13. Earls, Irene (1987). Renaissance Art: A Topical Dictionary. ABC-CLIO. பக். 226. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0313293295.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.