நல்ல கள்வன்

நல்ல கள்வன் அல்லது மனம்மாறிய கள்வன் என்பவர் லூக்கா நற்செய்தியில் பெயர் குறிப்பிடப்படாமல், சிலுவையில் இயேசு கிறித்துவின் இரு பக்கத்திலும் அறையப்பட்ட கள்வர்களுள் ஒருவராவார். பாரம்பரியப்படி இவரின் பெயர் புனித தீஸ்மாஸ் ஆகும். இவர் சிலுவையில் தன் பாவங்களுக்காய் மனம்வறுந்தி இயேசுவிடம் மன்னிப்பு பெற்று விண்ணகம் சென்றார் என்பது விவிலிய அடிப்படையில் கிறித்தவ நம்பிக்கை ஆகும்.

புனித தீஸ்மாஸ்
செக் குடியரசில் உள்ள புனித தீஸ்மாஸின் சிலை (1750).
நல்ல கள்வன்
இறப்புசுமார். 33 கி.பி
கொல்கொதா மலை, யெரூசலமுக்கு வெளியே
ஏற்கும் சபை/சமயம்கிழக்கு மரபுவழி திருச்சபை
கத்தோலிக்க திருச்சபை
திருவிழாமார்ச் 25
சித்தரிக்கப்படும் வகைசிலுவையில் இயேசு கிறித்துவின் அருகில் அறையப்பட்டிருப்பது போல
பாதுகாவல்கைதிகள், குறிப்பாக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளோர்; சவப்பெட்டி செய்வோர்; மனம்மாறிய கள்வர்கள்;

விவிலியத்தில்

இயேசுவோடு அவரின் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை சிலுவைகளில் அறைந்தார்கள் என விவிலியம் கூறிகின்றது. (Matthew 27:38, Mark 15:27-28, Luke 23:33, John 19:18),

இன்நிகழ்வை மாற்கு, ஏசாயா 53:12இல் உள்ள மறைநூல் வாக்கு நிறைவேறியதாக கூறுகின்றார். மத்தேயு இரண்டு கள்வர்களுமே இயேசுவை பழித்துரைத்ததாக கூறுகின்றார் (Matthew 27:44). ஆயினும் லூக்கா பின்வருமாறு இன்நிகழ்வை விவரிக்கின்றார்:

39 சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், 'நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று' என்று அவரைப் பழித்துரைத்தான். 40 ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, ' கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். 41 நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே! ' என்று பதிலுரைத்தான். 42 பின்பு அவன், ' இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும் ' என்றான். 43 அதற்கு இயேசு அவனிடம், ' நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் ' என்றார். 23:39-43

நல்ல கள்வன் பேரின்ப வீட்டில் இருப்பது போல வரையப்பட்ட உருசிய மரபுவழி திருவோவியம் (காலம்: கி.பி 1560)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.