விண்ணக அரசியே!

விண்ணக அரசியே! (இலத்தீன்: Regina Cæli) என்பது கிறித்தவ திருச்சபைகளில் பாடப்பெறும் மிகவும் பழைய மரியாவின் பாடலாகும். கத்தோலிக்க திருச்சபையில் தூய கன்னி மரியாவுக்கு திருப்புகழ்மாலையில் பாடப்படும் திருவழிபாட்டு கால பாடல்கள் நான்கினுள் இதுவும் ஒன்றாகும். புனித சனியின் இரவு துவங்கி பெந்தக்கோஸ்து விழாவுக்கு அடுத்துவரும் ஞாயிறு முடிய உள்ள பாஸ்குகாலத்தில் மூவேளை செபத்திற்கு பதிலாக இது சொல்லப்படுவது வழக்கம்.

தூய கன்னி மரியா

செபத்தின் வரலாறு

இச்செபத்தின் ஆக்குனர் யார் என்பது குறித்த தகவல் இல்லை. 12ம் நூற்றாண்டு முதல் இது பழக்கத்தில் உள்ளது. ஆயினும் சில மரபுப்படி புனித பெரிய கிரகோரி ஒரு உயிர்ப்பு ஞாயிறு அன்று தேவத்தூதர்கள் இச்செபத்தின் முதன் மூன்றுவரியினை செபிப்பதை கேட்டு, கடவுளால் தூண்டப்பட்டு நான்காம் வரியினை இணைத்து பயன்படுத்தினார் என்பர்.[1]

தமிழில்

விண்ணக அரசியே! மனம் களிகூரும். அல்லேலூயா.
ஏனெனில் இறைவனைக் கருத்தாங்கும் பேறு பெற்றீர். அல்லேலூயா.
தாம் சொன்னபடியே அவர் உயிர்த்தெழுந்தார். அல்லேலூயா.
எங்களுக்காக இறைவனை மன்றாடும். அல்லேலூயா.
கன்னி மரியே! அகமகிழ்ந்து பூரிப்பு அடைவீர். அல்லேலூயா.
ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார். அல்லேலூயா.

மன்றாடுவோமாக: இறைவா / உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால் / உலகம் மகிழத் திருவுளம் கொண்டீரே! / அவருடைய அன்னையாகிய கன்னி மரியாவின் பரிந்துரையால் / நாங்கள் நிலை வாழ்வின் பெரு மகிழ்வில் பங்கு பெற / அருள் புரியும். / எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக / உம்மை மன்றாடுகிறோம். / ஆமென்.

மேற்கோள்கள்

  1. "Regina Coeli". The Marian Library/International Marian Research Institute (27 Feb 2013). பார்த்த நாள் 24 April 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.