வாரும் தூய ஆவியே

வாரும் தூய ஆவியே என்பது கத்தோலிக்க திருச்சபையில் தூய ஆவியாரை நோக்கி சொல்லப்படும் செபமாகும்.[1] கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விநூல் எண். 2670–2672இல் இச்செபத்தைக்குறித்து விவரிக்கின்றது.

செபம்

வாரும் தூய ஆவியே, உம் அடியவரின் உள்ளங்களை நிரப்பிடுவீர். அவற்றில் உம் அன்புத்தீயை மூட்டியருள்வீர்.
மு. உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;
எல். மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
செபிப்போமாக
இறைவா, உம் மக்களின் உள்ளங்களை தூய ஆவியாரின் ஒளியால் தெளிவு படுத்தினீரே, அதே தூய ஆவியாரால் நாங்கள் சரியானவற்றை உணரவும், அவருடைய ஆறுதலால் மகிழ்வு பெறவும் அருள்புரியும். இவற்றை எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Thomas Zanzig, Brian Singer-Towns. Candidate's Handbook. பக். 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-88489-677-3.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.