புனிதர்களின் மன்றாட்டுமாலை

புனிதர்களின் மன்றாட்டுமாலை (ஆங்கிலம்:Litany of the Saints; இலத்தீன்: Litaniæ Sanctorum) என்பது கத்தோலிக்க திருச்சபை, மரபுவழி திருச்சபை, லூதரனியம், மற்றும் சில ஆங்கிலிக்க திருச்சபைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஒருவகை மன்றாட்டாகும். இது தூய கன்னி மரியா, இறை தூதர்கள், மறைசாட்சியர் மற்றும் பிற புனிதர்களின் பரிந்துரையினை வேண்டுவதாக அமைந்துள்ளது. இது திருப்பலியில் பாஸ்கா திருவிழிப்பு, புனிதர் அனைவர் பெருவிழா மற்றும் திருப்பட்டங்கள் அளிக்கப்படும் திருவழிபாட்டில் பயன்படுத்தப்படுகின்றது. இச்செபத்தின் அதிகாரப்பூர்வ வடிவம் திருச்சடங்கு புத்தகத்தில் உள்ளது. இதுவே திருமுழுக்கு போன்ற திருவருட்சாதனங்களில் பயன்படுத்தப்படும்.[1]

மேற்கோள்கள்

  1. Catholic Church; Abbaye Saint-Pierre de Solesmes (1979). Graduale Romanum. Paraclete Pr. பக். 831–837. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2-85274-094-5. http://books.google.com/books?id=89ouAAAAIAAJ. பார்த்த நாள்: 28 அக்டோபர் 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.