ஆங்கிலிக்க ஒன்றியம்

ஆங்கிலிக்க ஒன்றியம் அல்லது ஆங்கிலேய ஐக்கியம் (Anglican Communion) என்பது உலகம் முழுவதுமுள்ள ஆங்கிலிக்க திருச்சபைகளின் சேர்க்கையாகும். இது உலகத்தில் மிகப்பெரிய மதத்தின் இரண்டாம் பெரிய மதப்பிரிவாகும். இங்கிலாந்து திருச்சபை மற்றும் அதன் தலைவர் கன்டபரி பேராயருடன் முழு ஒற்றுமையோடு இருக்கும் திருச்சபைகளின் ஒன்றியமாகும். ஆங்கிலிக்க திருச்சபைகளிற்கு பிராந்திய பேராயர்கள் தலைமையேற்கின்றனர். மாறாக நாடு, பிரதேச மட்டத்திலான முழு அதிகாரம் கொண்ட திருச்சபைகளே காணப்படுகின்றன.

Anglican Communion
ஆங்கிலிக்க ஒன்றியக் கொடி
இறையியல் ஆங்கிலிக்கம்
குமுகம் Episcopal
பிரிவுகள் Continuing Anglican movement
உறுப்பினர்கள் 80 million+
அதிகாரப்பூர்வ இணையத்தளம் anglicancommunion.org

77 மில்லியனுக்கும் மேலான பின்பற்றுனர்களைக் கொண்ட அங்கிலிக்க ஒன்றியம் உரோமன் கத்தோலிக்க திருச்சபை , கிழக்கு மரபுவழி திருச்சபைக்கு அடுத்தப்படியாக உலகின் மூன்றாவது பெரிய சமயப் பிரிவாகும்.

தமிழ் நாடு உட்பட தென் இந்திய மாநிலங்களும் இலங்கையும் ஒரு பிரிவாக தென்-இந்திய திருச்சபையின்கீழ் உள்ளன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.