மக்தலேனா தே பாசி

புனித மரிய மக்தலேனா தே பாசி (ஏப்ரல் 2, 1566 – மே 25, 1607) என்பவர் ஒரு இத்தாலிய உரோமன் கத்தோலிக்க புனிதரும், கர்மேல் சபைத் துறவியும், கிறித்தவ சித்தரும் ஆவார்.

மக்தலேனா தே பாசி
1878-ஆம் ஆண்டில் அச்சடிக்கப்பெற்ற Little Pictorial Lives of the Saints-என்னும் புத்தகத்திலிருந்து
கன்னியர்
பிறப்புஏப்ரல் 2, 1566(1566-04-02)
பிளாரன்சு, இத்தாலி
இறப்புமே 25, 1607(1607-05-25) (அகவை 41)
பிளாரன்சு, இத்தாலி
ஏற்கும் சபை/சமயம்உரோமன் கத்தோலிக்கம்
அருளாளர் பட்டம்எட்டாம் அர்பன்-ஆல் 1626, உரோம்
புனிதர் பட்டம்பத்தாம் கிளமெண்ட்-ஆல் ஏப்ரல் 28, 1669, உரோம்
திருவிழாமே 25; மே 29 (கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி 1728-1969)
பாதுகாவல்நேப்பிள்ஸ் (துணை பாதுகாவலர்)

வாழ்க்கைக் குறிப்பு

புனித மரிய மக்தலேனா தே பாசி, இத்தாலிய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த, உயர் குடியும் (noble family), செல்வந்தருமாகிய பாசி (Pazzi) குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரின் திருமுழுக்கு பெயர் கத்ரினா என்பதாகும். இவர் தனது 12-ஆம் அகவையில், தன் தாயின் முன்நிலையில் முதல் பரவச நிலையை (ecstasy) அடைந்தார். இதன் பின் பல முறை இவ்வகையான அனுபவங்களைப் பெற்றார். தனது 14-ஆம் அகவையில் துறவற சபையில் சேர்ந்தாலும், அவரின் குடும்பத்தின் எதிர்ப்பால், திருப்பி அனுப்பப்பட்டார். அவரது குடும்பத்தினர் அவரை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தின போதும், அவர்களது மனதை மாற்றி, தன் 16-ஆம் அகவையில் கர்மேல் சபையில் சேர்ந்து, மரிய மக்தலேனா என்னும் பெயரை, தன் துறவற பெயராகக் கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும், கடும் தவமும், செபமும் செய்து வந்தார்.

புனிதர் பட்டமளிப்பு

இவரின் இறப்புக்குப் பின், பல புதுமைகள் நிகழ்ந்ததால், இவருக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் அளிப்பதற்கான முயற்சிகள் திருத்தந்தை ஐந்தாம் பவுலின் ஆட்சியில் துவங்கி திருத்தந்தை எட்டாம் அர்பனின் ஆட்சியில் 1626-இல் வழங்கப்பட்டது. எனினும் 62 ஆண்டுகளுக்குப் பின்னரே திருத்தந்தை பத்தாம் கிளமெண்டால், ஏப்ரல் 28, 1669 அன்று புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது.

விழா நாள்

இவரின் புனிதர் பட்டமளிப்பின் போது, இவரது விழா நாள், இவரின் இறந்த நாள் ஆகிய, 25 மே எனக்குறிக்கப்பட்டது. ஆனால் 1725-இல் அந்நாள் புனித திருத்தந்தை எட்டாம் கிரகோரிக்கு ஒதுக்கப்பட்டதால் 29 மே-க்கு நகர்த்தப்பட்டது. 1969-இல் நடந்த மாற்றத்தில் மீண்டும் 25 மே-க்கு நகர்த்தப்பட்டது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.