முதலாம் மார்ட்டின் (திருத்தந்தை)

திருத்தந்தை முதலாம் மார்ட்டின் (இலத்தீன்: Martinus I; இ., 16 செப்டம்பர் 655) என்பவர் திருத்தந்தையாக 21 ஜூலை 649 முதல் 655இல் தனது இறப்புவரை ஆட்சி செய்தவர் ஆவார்.[1]

திருத்தந்தை புனித
முதலாம் மார்ட்டின்
ஆட்சி துவக்கம்21 ஜூலை 649
ஆட்சி முடிவு16 செப்டம்பர் 655
முன்னிருந்தவர்முதலாம் தியடோர்
பின்வந்தவர்முதலாம் யூஜின்
பிற தகவல்கள்
பிறப்பு21 சூன் 598
தோடி. உம்பிரியா, பைசாந்தியப் பேரரசு
இறப்பு16 செப்டம்பர் 655(655-09-16)
செர்சன், கிரிமியா, பைசாந்தியப் பேரரசு
மார்ட்டின் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

தோடி. உம்பிரியா, பைசாந்தியப் பேரரசில் இவர் பிறந்தார். 5 ஜூலை 649இல் திருத்தந்தை முதலாம் தியடோருக்குப் பின்பு இவர் திருத்தந்தையானார். பைசாந்திய திருத்தந்தை ஆட்சிகாலத்தின்போது, அப்போதைய காண்ஸ்தான்தினோபிளின் அரசரிடம் ஒப்புதல் பெறாமல் திருத்த்ந்தையானர்வர் இவர் ஒருவரே. இவரை இரண்டாம் கான்ஸ்தன்சு அரசர் கடத்திச்சென்றார். இவர் கிரிமியா மூவலந்தீவில் இறந்தார். இவரை இரத்தசாட்சியாகவும் புனிதராகவும் கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபை ஏற்கின்றன.

இவர் திருத்தந்தையானப்பின்பு முதல் வேலையாக 649இல் இலாத்தினர் பொதுச்சங்கத்தினை மொனொதிலிடிசம் (Monothelitism) என்னும் கொள்கையினைக்குறித்து விவாதித்து முடிவெடுக்கக் கூட்டினார். இலாத்தரன் யோவான் பேராலயத்தில் கூடிய இக்கூட்டத்தில் 105 ஆயர்கள் கலந்து கொன்டனர். இது ஐந்து அமர்வுகளில் 5 அக்டோபர் முதல் 31 அக்டோபர் 649 வரை நடந்தது. இதில் 20 சட்டங்கள் வெளியிடப்பட்டன. அவை மொனொதிலிடிசம் கொள்கையினை திரிபுக்கொள்கை என அறிக்கையிட்டது.

மார்ட்டின் இச்சங்கத்தின் முடிவுகளை சுற்றுமடலாக வெளியிட்டார். இத்திரிபுக்கொள்கையினரான இரண்டாம் கான்ஸ்தன்சு அரசர் இவரை கைது செய்ய ஆணையிட்டார். இவர் 17 ஜூன் 653 அன்று கைதுசெய்யப்பட்டு 17 செப்டம்பர் 653இல் காண்ஸ்தான்தினோபிளுக்கு இட்டுச்செல்லப்பட்டார். அங்கிருந்து பைசாந்தியப் பேரரசின் செர்சனுக்கு (தற்போதைய கிரிமியா) நாடுகடத்தப்பட்ட்டார். 15 மே 655 இல் அங்குவந்த அவர் அதே ஆண்டு 16 செப்டம்பரில் உயிர் நீத்தார்.

விழா நாள்

இவரின் விழா நாள் ஏப்ரல் 13 அன்று விருப்ப நினைவாக கத்தோலிக்க திருச்சபையில் கொன்டாடப்படுகின்றது.[2] இதற்கு முன்னர் நவம்பர் 12இல் இவரின் விழா நாள் கொண்டாடப்பட்டது.

மேற்கோள்கள்

  1. Mershman, Francis (1910). "Pope St. Martin I" in The Catholic Encyclopedia. Vol. 9. New York: Robert Appleton Company.
  2. http://www.americancatholic.org/Features/Saints/saint.aspx?id=1352

வெளி இணைப்புகள்

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
முதலாம் தியடோர்
திருத்தந்தை
649–655
பின்னர்
முதலாம் யூஜின்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.