ஐந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை)
திருத்தந்தை பன்னிரண்டாம் யோவானின் இறப்பிற்கு பின் திருத்தந்தை ஐந்தாம் பெனடிக்டை உரோமை நகர மக்கள் 964-இல் தேர்ந்தெடுத்தனர். ஆனால் பேரரசன் முதலாம் ஓட்டோ (Otto I) இத்தேர்வை ஏற்கவில்லை. ஆகவே ஒரு மாததிற்கு பின் இவரை பதவி நீக்கம் செய்தான். சில சமகாலத்தவரின் எழுத்துகளில் இவர் தானாக பதவி விலகினார் என்கின்றனர். பின்பு இவர் ஹம்பர்க்-பெர்மின் பேராயரின் பாதுகாவலில் விடப்பட்டார். அங்கே திருத்தொண்டராக பணியாற்றி 966-இல் மரித்தார். ஹம்பர்க் கதிடிரலிலேயே முதலில் புதைக்கப்பட்ட இவரின் மீப்பொருள் பின்நாளில் உரோமைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
ஐந்தாம் பெனடிக்ட் | |
---|---|
![]() | |
ஆட்சி துவக்கம் | மே 22 964 |
ஆட்சி முடிவு | ஜூன் 23 964 |
முன்னிருந்தவர் | பன்னிரண்டாம் யோவான் |
பின்வந்தவர் | எட்டாம் லியோ |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ??? |
பிறப்பு | ??? உரோமை நகரம், இத்தாலி |
இறப்பு | சூலை 4, 966 ஹம்பர்க், ஜெர்மனி |
பெனடிக்ட் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
இவரை பதவி விலக்கிய சங்கத்தில், இவரது ஆயத்துவ செங்கோல் (papal scepter) திருத்தந்தை எட்டாம் லியோவால் இவரது தலைமேல் உடைக்கப்பட்டது. இதுவே திருத்தந்தையின் செங்கோலைப்பற்றிய மிகப்பழைய ஆவணமாகும்.
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள் | ||
---|---|---|
முன்னர் பன்னிரண்டாம் யோவான் |
திருத்தந்தை 964 |
பின்னர் எட்டாம் லியோ |
மேற்கோள்கள்
- 9th edition (1880s) of the en:Encyclopædia Britannica
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.