இரண்டாம் அர்பன் (திருத்தந்தை)
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் அர்பன் (சுமார். 1042 – 29 ஜூலை 1099), இயர்பெயர் ஓத்தோ தே லகேரி, என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 12 மார்ச் 1088 முதல் 29 July 1099 அன்று தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார். இவர் முதலாம் சிலுவைப் போரை (1096–1099) துவங்கியதற்காகவும் திருப்பீட ஆட்சித்துறைகளை (Roman Curia) திருச்சபையை செவ்வனே நடத்த ஒரு அரசு அவையைப்போல அமைத்ததர்க்காகவும் அறியப்படுகின்றார்.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் அர்பன் | |
---|---|
159ஆம் திருத்தந்தை | |
![]() | |
ஆட்சி துவக்கம் | 12 மார்ச் 1088 |
ஆட்சி முடிவு | 29 ஜூலை 1099 |
முன்னிருந்தவர் | மூன்றாம் விக்டர் |
பின்வந்தவர் | இரண்டாம் பாஸ்கால் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ஓத்தோ தே லகேரி |
பிறப்பு | சுமார்.1042 லகேரி, பிரான்சு பேரரசு |
இறப்பு | 29 சூலை 1099 உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு |
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | 29 ஜூலை |
ஏற்கும் சபை | கத்தோலிக்க திருச்சபை |
முத்திப்பேறு | 1881 பதின்மூன்றாம் லியோ-ஆல் |
அர்பன் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
ஏழாம் கிரகோரி கி.பி 1080இல் இவரை ஓஸ்தியாநகரின் கர்தினால் ஆயராக நியமித்தார். இவர் கி.பி. 1084 இல் ஜெர்மனியில் திருத்தந்தையின் தூதுவராக பணியாற்றிய போது, ஏழாம் கிரகோரியின் மாற்றங்களுக்கு ஆதரவு தந்து அவற்றை முனைப்புடன் செயல் படுத்தினார். ஏழாம் கிரகோரியின் இறப்புக்குப் பின் மூன்றாம் விக்டர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் சிறிது காலமே திருச்சபையினை ஆண்டார். அவரின் இறப்புக்குப்பின் இரண்டாம் அர்பன் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரின் ஆட்சியின் போது எதிர்-திருத்தந்தை மூன்றாம் கிளமண்ட் இருந்தார். இவர் பல சங்கங்களைக்கூட்டி ஆயர்களை நியமிப்பதில் திருத்தந்தைக்கு இருக்கும் அதிகாரம், குருக்களின் கற்பு நிலை, திருச்சபையின் திருவருட்சாதனங்களை காசுக்கு விற்பதை எதிர்த்தும் பல அறிக்கைகளை வெளியிட்டார்.
வெளி இணைப்புகள்
- Five versions of his speech for the First Crusade from Medieval Sourcebook.
- Medieval Lands Project on Eudes de Châtillon, Bishop of Ostia, Pope Urban II, the son of Milon the seigneur of Châtillon in the 11th century
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள் | ||
---|---|---|
முன்னர் மூன்றாம் விக்டர் |
திருத்தந்தை 1088–99 |
பின்னர் இரண்டாம் பாஸ்கால் |