புனித லாரன்சு

புனித லாரன்சு அல்லது உரோமை நகர புனித லாரன்சு (Lawrence of Rome அல்லது Saint Lawrence, (கிபி 225 - 258) என்பவர் 258-ஆம் ஆண்டு உரோமை நகரில் கொல்லப்பட்ட ஏழு திருத்தொண்டர்களுள் ஒருவர்.[1] வலேரியானின் என்ற அரசன் திருச்சபையின் சொத்துக்களை தன்னிடம் ஒப்படைக்க இவரை வற்புறுத்திய போது, இவர் அச்சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடுத்தார். இதனால் கோபமடைந்த அரசன் இவரை வாணலியில் வறுத்துக் கொல்ல தீர்ப்பிட்டான் என பாரம்பரியம் கூறுகிறது. தன்னை வறுத்துக் கொண்டிருந்தவர்களிடம் "இந்தப்பக்கம் வெந்துவிட்டது... மறுபக்கம் திருப்பி போடுங்கள்.." என்று நகைச்சுவையாகக் கூறினார் என்பர்.

உரோமை நகர புனித லாரன்சு
வலேரியானின் முன் லாரன்சு
திருத்தொண்டர், இரத்த சாட்சி
பிறப்பு225
எசுப்பானியா
இறப்புஆகத்து 10, 258(258-08-10)
உரோமை நகரம்
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்கம்
ஆங்கிலிக்கம்
கிழக்கு மரபு
திருவிழா10 ஆகஸ்ட்
சித்தரிக்கப்படும் வகைவாணல், திருத்தொண்டருக்கான உடைகள்
பாதுகாவல்உரோமை நகரம், எசுப்பானியா, இலங்கை, கனடா, மாணாக்கர், சமையற்காரர், நூலகத்தின் பொறுப்பாளர்,

மரபுப்படி இவர் இறந்ததாக நம்பப்படும் இடத்தில் முதலாம் கான்ஸ்டன்டைன் மன்னர் ஒரு சிற்றாலயம் அமைத்தார். இது உரோமை நகரின் ஏழு திருப்பயணக் கோவில்களுல் ஒன்றாக துவக்கக்காலம் முதலே கருதப்பட்டது. இவ்வாலயத்தை திருத்தந்தை முதலாம் தாமசுஸ் சீமைத்து புனித இலாரன்சு பெருங்கோவிலாக மாற்றினார்.

படக்காட்சியகம்

ஆதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.