கிறிஸ்து அரசர் பெருவிழா

கிறிஸ்து அரசர் பெருவிழா என்பது கத்தோலிக்க திருச்சபையிலும், மேலும் சில கிறிஸ்தவ சமயப் பிரிவுகளிலும் கொண்டாடப்படும் விழா ஆகும். இயேசு கிறிஸ்து அனைத்துலகின் அரசர்களுக்கெல்லாம் அரசர் என்ற மையப்பொருளில் சிறப்பிக்கப்படும் இவ்விழா, பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படுகிறது,

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா
கிறிஸ்து அரசர் ஓவியம், ஹேகியா சோபியா
கடைபிடிப்போர்கத்தோலிக்க திருச்சபை
திருவழிபாட்டின் நிறம்வெள்ளை
அனுசரிப்புகள்நாள் முழுவதும் நற்கருணை ஆராதனை
நாள்திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறு
2018 இல் நாள்25 நவம்பர்
2019 இல் நாள்24 நவம்பர்
2020 இல் நாள்22 நவம்பர்
2021 இல் நாள்21 நவம்பர்
நிகழ்வுஆண்டுதோறும்
First timeஅக்டோபர் 31, 1926
கிறிஸ்து அரசர் ஓவியம்
திருவழிபாட்டு ஆண்டு
(கத்தோலிக்கம்)
திருவழிபாட்டுக் காலங்கள்
முக்கியப் பெருவிழாக்கள்

கிறிஸ்து அரசர்

"யோவானாகிய நான் விண்ணகம் திறந்திருக்கக் கண்டேன். அங்கே ஒரு வெண்குதிரை காணப்பட்டது. அதன்மேல் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது தலைமேல் பல மணிமுடிகள் இருந்தன. இரத்தம் தோய்ந்த ஆடையை அவர் அணிந்திருந்தார். கடவுளின் வாக்கு என்பது அவரது பெயர். அரசர்க்கெல்லாம் அரசர், ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர் என்ற பெயர் அவருடைய ஆடையிலும் தொடையிலும் எழுதப்பட்டிருந்தது."[1] என்று கிறிஸ்துவின் அரசத்தன்மை பற்றி திருவெளிப்பாடு நூல் குறிப்பிடுகிறது.

வரலாற்றில்

தேசியவாதம், மதச்சார்பின்மை போன்றவற்றின் வளர்ச்சிக்கு பதிலளிக்கும் விதமாக திருத்தந்தை 11ம் பயஸ், 1925ல் குவாஸ் ப்ரைமாஸ் (முதலாவது) என்ற சுற்றுமடல் வழியாக கிறிஸ்து அரசர் பெருவிழாவை நிறுவினார்.[2] அப்போது இவ்விழா, 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அரசர்' (D. N. Jesu Christi Regis) என்ற பெயரில், அக்டோபர் கடைசி ஞாயிறன்று சிறப்பிக்கும் வகையில் நிறுவப்பட்டது. 1960ல் திருத்தந்தை 23ம் யோவான், இதை முதல் வகுப்பு விழாவாக மாற்றினார்.

1960ல் திருத்தந்தை 6ம் பவுல், தனது மோட்டு ப்ரொப்ரியோ (அவரது தூண்டுதலால்) என்ற சுற்றுமடல் வழியாக இவ்விழாவின் பெயரை, 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர்' (D. N. Iesu Christi universorum Regis) என்று மாற்றினார். மேலும், அவர் இவ்விழாவை திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறன்று பெருவிழாவாக கொண்டாடுமாறு ஆணையிட்டார்.[3]

தற்காலத்தில்

கத்தோலிக்க திருச்சபையில் திருத்தந்தை 6ம் பவுல் கற்பித்த விதத்திலேயே, இக்காலத்திலும் கிறிஸ்து அரசர் பெருவிழா கொண்டாடப்படுகிறது. பெருவிழாவுக்கு உரிய விதத்தில், திருவழிபாட்டில் வெள்ளை அல்லது பொன்னிற திருப்பலி உடை பயன்படுத்தப்படுகிறது.

முதலாவதாக கத்தோலிக்க திருச்சபையில் தோன்றிய இவ்விழா, தற்காலத்தில் ஆங்கிலிக்க ஒன்றியம், அமெரிக்க லூதரனியம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவப் பிரிவினராலும் கொண்டாடப்படுகிறது.

ஆதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.