எசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்

எசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள் என்பவர்கள் எசுப்பானிய உள்நாட்டுப் போரின் போது தங்களின் கத்தோலிக்க நம்பிக்கைக்காக கொல்லப்பட்டவர்களைக் குறிக்கும்.[1] ஜூலை 2008இன் படி, ஏறத்தாழ ஆயிரம் மறைசாட்சிகளுக்கு புனிதர் பட்டமும், அருளாளர் பட்டமும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரம் பேர்களின் புனிதர் பட்டமளிப்புக்கான நடவடிக்கைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

எசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்
மறைசாட்சிகள்
பிறப்புபலர்
இறப்பு1934, 1936-1939
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் பட்டம் 1987, 1989, 1990, 1992, 1993, 1995, 1997, மார்ச் 11, 2001 - திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்; அக்டோபர் 28, 2007 - திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்[1]; மற்றும் அக்டோபர் 07, 2013 - திருத்தந்தை பிரான்சிசு
புனிதர் பட்டம்திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்-ஆல் 1999 (1934இன் ஆதூரியா எழுச்சியின் போது கொல்லப்பட்ட 9 பேர்)[1], உரோமை நகரம்
திருவிழாசெப்டம்பர் 22 மற்றும் நவம்பர் 6

1936 முதல் 1939 வரை நடந்த எசுப்பானிய உள்நாட்டுப் போரின் துவக்ககாலத்தில் கத்தோலிக்க குருக்கள் பலர் கொல்லப்பட்டனர். மேலும் கத்தோலிக்க துறவரசபைகள் முடக்கப்பட்டன. இப்போரின் போது 13 ஆயர்கள், 4,172 மறைமாவட்ட குருக்கள் மற்றும் குருமட மாணவர்கள், 2,364 துறவிகள் மற்றும் 283 அருட்சகோதரிகள் கொல்லப்பட்டனர். மொத்தம் 6,832 அருட்பணியாள்ர்கள் கொல்லப்பட்ட இக்காலம் எசுப்பானியாவின் சிகப்பு பயங்கரவாதம் (Spain's Red Terror) என அழைக்கப்படுகின்றது.[2]

மேற்கோள்கள்

  1. Butler, Alban and Peter Doyle Butler's Lives of the Saints p. 169 Liturgical Press (பெப்ரவரி 2000)
  2. Julio de la Cueva, "Religious Persecution, Anticlerical Tradition and Revolution: On Atrocities against the Clergy during the Spanish Civil War" Journal of Contemporary History 33.3 (ஜூலை 1998): 355.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.