சீர்திருத்தத் திருச்சபை

சீர்திருத்தத் திருச்சபைகள் (Protestantism, புரட்டஸ்தாந்தம்) என்பது கிபி 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தை தொடர்ந்து தொடங்கப்பட்ட கிறித்தவச் சபைகளைக் குறிக்கும். சீர்திருத்தச் சபைகளின் கோட்பாடுகள் விவிலியத்தின் உள்ளடக்கத்துக்கு ஏனையவர்கள் கொடுத்துள்ள விளக்கங்களை பின்பற்றாது விவிலியத்தை நேரடியாக பின்பற்றுகிறது.[1] அது விவிலியத்தை கடவுளை அறிவதற்கான ஒரே வழியாகவும், மீட்படைய மனித செயல்களால் அல்ல, மாறாக கடவுளின் கருணையால் மட்டுமே முடியும் எனவும் போதிக்கிறது.

மார்ட்டின் லூதர் புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் என அழைக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

  1. O'Gorman, Robert T. and Faulkner, Mary. The Complete Idiot's Guide to Understanding Catholicism. 2003, page 317.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.