ஏழாம் நாள் வருகை சபை

ஏழாம் நாள் வருகை திருச்சபை (seventh-day Adventist Church, செவன்த் டே அட்வென்டெஸ்ட் திருச்சபை) எனப்படுவது சனிக்கிழமையை ஓய்வு நாளாய்க் (ஷபாத்) கருதும் யூத வழக்கத்தை பின்பற்றும் கிறித்தவச் சபையினர் ஆவர். கிறித்துவின் இரண்டாம் வருகை நெருங்கி விட்டது என்பது இவர்களின் முக்கியக் கோட்பாடு ஆகும். மற்றபடி விவிலியத்தின் புனிதத்தன்மை, திரித்துவக் கோட்பாடு போன்றவற்றில் இவர்கள் சீர்திருத்தக் கிறித்தவர்களுடன் ஒத்த கொள்கையைக் கொண்டுள்ளனர்.

Seventh-day Adventist Church
வகைப்பாடு சீர்திருத்தத் திருச்சபை
இறையியல் Adventist
குமுகம் Modified Presbyterian Polity
தலைவர் Ted N. C. Wilson
புவியியல் பிரதேசம் Worldwide
நிறுவனர் Joseph Bates
James White
Ellen G. White
J. N. Andrews
ஆரம்பம் May 21, 1863
Battle Creek, மிச்சிகன்
எதன் கிளை Millerites
பிரிவுகள் SDA Reform Movement
(separated 1925, small minority);
Shepherds Rod – Davidian SDAs
(separated 1929, small minority)
பிரார்த்தனைக் கூட்டங்கள் 74,299 churches,
67,669 companies
உறுப்பினர்கள் 18,143,745[1]
மறை பரப்புனர்கள் 17,272[2]
மருத்துவமனைகள் 175[2]
மருத்துவ இல்லங்கள் 136[2]
உதவி நிறுவனங்கள் Adventist Development and Relief Agency
ஆரம்பப் பள்ளிகள் 5,714[2]
உயர்நிலைப் பள்ளிகள் 1,969[2]
உயர்கல்வி நிறுவனங்கள் 113[2]
வேறு பெயர்(கள்) Adventist church, SDA (informal)
அதிகாரப்பூர்வ இணையத்தளம் www.adventist.org

எல்லன் ஜி. ஒயிட் என்ற பெண்மணி இச்சபையின் நிறுவனர்களுள் குறிப்பிடத்தக்கவர். உலகம் முழுதுமாக மொத்தம் 16.3 மில்லியன் மக்கள் இச்சபையின் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சபை சைவ உணவுப் பழக்கத்தை வலியுறுத்துவதோடு புகையிலை, மது ஆகியவற்றையும் தவிர்க்கும் படி தனது உறுப்பினர்களை வலியுறுத்துகிறது. அமெரிக்க தேசிய நல நிறுவனம் மூலம் நடந்த ஆராய்ச்சியால் அட்வென்டிஸ்ட் சபையினர் மற்றவர்களை விட சராசரியாக 4 முதல் 5 ஆண்டுகள் அதிக ஆயுளுடன் வாழ்வதாகத் தெரிய வந்தது [3]

மேற்கோள்கள்

  1. "Oops, page not found". adventist.org.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.