மகோபநிடதம்
மகோபநிடதம் என்பது சாம வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 62வது உபநிஷத்து. ஆறு அத்தியாயங்களில் 13, 77, 57, 131, 186, 83 சுலோகங்களைக் கொண்டது. சாமானிய வேதாந்த உபநிடதங்கள் என்ற பகுப்பில் சேர்ந்தது.
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
![]() |
இருக்கு வேதம் ஐதரேயம் |
பிரம்ம புராணங்கள் பிரம்ம புராணம்{•} பிரம்மாண்ட புராணம்{•} பிரம்ம வைவர்த்த புராணம்{•} மார்க்கண்டேய புராணம்{•} பவிசிய புராணம் வைணவ புராணங்கள் விஷ்ணு புராணம்{•} பாகவத புராணம்{•} நாரத புராணம், கருட புராணம்{•} பத்ம புராணம்{•} வராக புராணம்{•} வாமன புராணம்{•} கூர்ம புராணம்{•} மச்ச புராணம்{•} கல்கி புராணம் |
அரி வம்சம் • சூரிய புராணம் • கணேச புராணம் • காளிகா புராணம் • கல்கி புராணம் • சனத்குமார புராணம் • நரசிங்க புராணம் • துர்வாச புராணம் • வசிட்ட புராணம் • பார்க்கவ புராணம் • கபில புராணம் • பராசர புராணம் • சாம்ப புராணம் •
நந்தி புராணம் • பிருகத்தர்ம புராணம் • பரான புராணம் • பசுபதி புராணம் • மானவ புராணம் • முத்கலா புராணம் |
காலக்கோடு இந்து நூல்கள் |
முதல் மூன்று அத்தியாயங்களின் மேலோட்டம்
இவ்வுபநிஷத்துக் கருத்துகள் சற்று உயர்ந்த தத்துவங்களைக் கொண்டது. ஆதி நாராயணர் என்று தனித்திருந்த பரம்பொருட்கடவுளின் தியானத்திலிருந்து ஈசானர் என்ற மகாதேவரும் நான்முகப்பிரம்மா என்ற படைப்புக்கடவுளும் உண்டானார்கள். இது முதல் அத்தியாயம்.
பிறந்தவுடனேயே பரம்பொருள் தத்துவத்திலேயே திளைத்தவரான சுகர் தன் தந்தையான வியாசரிடம் கண்ணில் தெரியும் இவ்வுலகின் ஆரம்ப முடிவுகளைப்பற்றிக் கேட்டார். அவர் சுகரை மிதிலை மன்னன் ஜனகரிடம் அனுப்பினார். ஜனகர் சுகருக்குச் சொன்ன உபதேசம் இரண்டாவது அத்தியாயம். காணப்படுவதெல்லாம் தோற்றமே. இவையெல்லாம் அசல் உண்மையல்ல என்ற விழிப்பு ஏற்பட்டு, உலகவாசனை யாவும் அழிந்தால் அதுதான் வீடு என்றும் மோட்சம் என்றும் சொல்லப்படுகிறது. அவ்விதம் மனது சாந்தி நிலையை அடைந்தவன் வேறொன்றையும் வேண்டுவதில்லை.
மூன்றாவது அத்தியாயத்தில் நிதாகர் என்ற சிறுவரின் கேள்வி: 'வாழ்க்கையில் ஏற்படும் எல்லா துக்கங்களிலும் மிகக் கொடியது ஆசை விளைவிக்கும் துக்கம் என்று தோன்றுகிறது. இதனிலிருந்து மீளுவது எப்படி?'
மகோபநிஷத்தின் ஆழமான பாகங்கள்
தொடரின் ஒரு பகுதி |
![]() |
மூலங்கள்
வேதங்கள் · உபநிடதம் · பிரம்ம சூத்திரம் · பகவத் கீதை · புராணங்கள் · இதிகாசங்கள் |
வேத தொன்மவியல்
|
திருப்பாற்கடல் · வைகுந்தம் · கைலாயம் · பிரம்ம லோகம் · இரண்யகர்பன் · சொர்க்கம் · பிருத்வி · நரகம் · பித்துரு உலகம் |
கடவுள்கள்
மும்மூர்த்திகள் · பிரம்மன் · திருமால் · சிவன் · சரஸ்வதி · திருமகள் · பார்வதி · விநாயகர் · முருகன் |
புராண - இதிகாச கதைமாந்தர்கள்
சனகாதி முனிவர்கள் · பிரஜாபதிகள் · சப்த ரிசிகள் · பிருகு · அத்திரி · கௌதமர் · காசிபர் · வசிட்டர் · அகத்தியர் · ஜமதக்கினி · தட்சன் · வால்மீகி · அரிச்சந்திரன் · ராமர் · சீதை · இலட்சுமணன் · அனுமான் · இராவணன் · புரூரவன் · நகுசன் · யயாதி · பரதன் · துஷ்யந்தன் · வியாசர் · கிருஷ்ணர் · பீஷ்மர் · பாண்டவர்கள் · கர்ணன் · கௌரவர் · விதுரன் · பாண்டு · திருதராட்டிரன் காந்தாரி · குந்தி · |
இந்து தொன்மவியல் வலைவாசல் |
நான்காவது ஐந்தாவது அத்தியாயங்கள் மிக ஆழமானவை. வீடு என்ற மோட்சத்தின் வாயிலில் நான்கு வாயில்காப்பாளர்கள் உள்ளனர். புலனடக்கம், ஆராய்ச்சி, மகிழ்ச்சி, நல்லோரிணக்கம் - இவைதான் அந்த காப்பாளர்கள். முழுமுயற்சியுடன் ஒன்றைக் கைக்கொண்டால் அந்த ஒன்று வயமாகும்பொழுது நான்குமே வயமாகிவிடும்.
படைப்புக்கடவுளால் மனதாலேயே படைக்கப்பட்ட இவ்வுலகத்தோற்றமும் மனோமயமே. எங்கு கற்பனை எழுகிறதோ அங்கு மனம் உளதென்றறி.கற்பனை இல்லாதிருந்தால் காணும் உலகமும் கற்பனையே என்பது விளங்கும். அதுதான் கைவல்யம். கற்பனையால் உதித்த இவ்வுலகம் கற்பனையாலேயே அழியும். ஆன்மாவல்லாததை ஆன்மா எனக்கருதுதல் ஒரு அஞ்ஞானம்.
ஞானபூமியின் ஏழு படிகள்:
- வைராக்கியத்தை முன்னிட்டெழும் சுபேச்சை எனும் ஆசை.
- நன்னடத்தையைக் கைக்கொள்ளும் விசாரணை எனும் அப்பியாசம்.
- இவையிரண்டாலும் புலன்களின் ஓட்டமாகிற மனது தேய்ந்து இளைப்பது, தனுமானசி எனப்படுவது.
- இவை மூன்றால் சித்தத்தில் பற்று நீங்கி சத்வாபத்தி எனப்படும் நிலைபெறுதல்.
- இதனால் ஏற்படும் அஸம்ஸக்தி, அதாவது, பற்றற்ற திடமான ஸத்வநிலை.
- பதார்த்த அபாவனை, அதாவது, உள்ளேயும் நிலை பெறாமல் வேளியேயும் எதையும் நாடாமல் எழும் அறிவு விளக்கம்.
- இதனின் நீண்ட பயிற்சியால் பேதமொழிந்து ஏற்படும் இயற்கையான நிட்டை; இது துர்யகாகதி எனப்படும்.
இந்தக்கடைசிநிலைதான் ஜீவன்முக்திநிலை.
உலகில் நடக்கவேண்டிய முறை
ஜீவன்முக்தனாக, கொதிப்பற்றவனாக உலகில் நடமாடிக்கொண்டிரு.உள்ளே ஒரு கலவரமும் இல்லாதவனாக ஆனால் வெளியில் எல்லாக் கருமங்களையும் செய்பவனாகவும் இரு. இவர் உற்றார் அவர் பிறர் என்ற எண்ணமில்லாமல் உலகம் முழுதும் ஒரே குடும்பம் என்ற பாவனையில் இரு. அறிய வேண்டியது எதுவுமன்றி அறிவுமயமாகிய பரம்பொருள் நான் என்ற நிலையில் இருந்துகொண்டிருப்பவன் பிரம்ம நிலையில் இருப்பவன்.