பித்துரு உலகம்

பித்துரு உலகம் அல்லது பித்ரு லோகம் (Pitru loka) என்பது இந்து தர்மத்தின் படி, உடலைத் துறந்த ஆன்மாக்கள் மறு பிறப்பின் போது, வேறு உடல் கிடைக்கும் வரை காத்திருக்கும் இடமாகும். [1]இதனை பிரேத லோகம் என்றும் அழைப்பர்.[2] பித்துரு லோகம் பூமிக்கும், அந்தரிட்சத்திற்கும்[3] [4] நடுவில் இருப்பதாக பாகவத புராணம் (காண்டம் 5, அத்தியாயம் 24)  கூறுகிறது. [5]



இந்து சமய
கருத்துருக்கள்
பிரம்மம்
ஆத்மா
மாயை
கர்மா
ஆசை
துக்கம்
பிறவிச்சுழற்சி
மறுபிறவி
தர்மம்
மோட்சம், வீடுபேறு
அவதாரக் கோட்பாடு
லீலை
நரகம்
சொர்க்கம்
மந்திரம்
தாந்திரீகம்
தவம்
இந்து சமய
சடங்குகள்
பூசை
யாகம்
பலி கொடுத்தல்
அர்ச்சனை
ஓதுதல்
விரதம்
தியானம்
தவம்
ஜெபம்

இந்து சமய நம்பிக்கைகளின் படி, உடலை நீத்த ஆன்மா முற்பிறவியில் செய்த புண்ணிய - பாவ கர்மவினைகளுக்கு ஏற்ப, நரகத்தையும், சொர்க்கத்தையும் அனுபவித்து, செய்த பாவ - புண்ணியங்கள் தீர்ந்த பின்னர், பித்துரு லோகத்தில் மறு பிறவிக்கான உடல் கிடைக்கும் வரை தங்கியிருப்பர். பித்துரு லோகத்தினர் முற்பிறவியில் செய்த கருமவினைகளுக்கு ஏற்ப, மீண்டும் மனிதப் பிறவியாகவோ அல்லது வேறு பிறவியாகவோ பிறப்பர்.

மேற்கோள்கள்

  1. SOUL'S JOURNEY AFTER DEATH
  2. Preta loka (world of Spirits
  3. http://www.tamilvu.org/slet/servlet/lexpg?pageno=82
  4. அந்தரிட்சம்
  5. SRIMAD BHAGAVATA by Krsna-Dwaipayana Vyasa

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.