தமன்னா (நடிகை)

தமன்னா (Tamanna Bhatia, பிறப்பு டிசம்பர் 21, 1989) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடிப்பவர். 2005ல் சாந்த் சே ரோசன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். கல்லூரி திரைப்படம் தமனாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது. இதையடுத்து நடிகர் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன்,விஜய்யுடன் சுறா ஆகிய படங்களில் நடித்தார். கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார்.தமிழ் ,தெலுங்கு , இந்தியில் மொத்தம் 60 படங்களிலும் 50 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் .இவர் சிந்தி இனத்தைச் சேர்ந்தவர்.

தமன்னா
சென்னையில் ஓர் அழகுநிலையம் திறக்கும் நிகழ்வில் தமன்னா
பிறப்புதமன்னா பாட்டியா
21 திசம்பர் 1989 (1989-12-21)
மும்பை, மகாராட்டிரா, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை, வடிவழகி,நடன கலைஞர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2005–இற்றை
உயரம்5' 6"[1]

திரைவாழ்க்கை

2005 ஆம் ஆண்டு சந் சா ரோஷன் செகரா என்னும் படத்தின் மூலம் ஹிந்தியில் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர் சிறீ என்னும் படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார்.கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.முதல் மூன்று படங்களிலேயே தமிழ்,தெலுங்கு,இந்தி என மூன்று மொழி கதாநாயகியானார்.

அதனைத் தொடர்ந்து தமிழில் வியாபாரி,கல்லூரி ஆகிய படங்களிலும் ,தெலுங்கில் ஹேப்பி டேஸ்,காளிதாசு,ரெடி ஆகிய படங்கலிலும் நடித்தார்.

2009 ஆம் ஆண்டு தனுசுடன் நடித்த படிக்காதவன் படம் தமிழில் வெற்றி பெற்றது.அதன் வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவுடன் அயன் படத்தில் நடித்தார்.அந்த படம் தமிழில் 100 நாட்களும் ,தெலுங்கில் 200 நாட்களும் ,மலையாளத்தில் 200 நாட்களும் ஓடி மிகப்பெரிய வெற்றிபெற்றது.பின் தெலுங்கில் சித்தார்த்துடன் கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் படத்தில் நடித்தார்.தமிழில் ஆனந்த தாண்டவம்,பரத்துடன் கன்டேன் காதலை படங்களில் தொடர்ந்து நடித்தார்.

2010 ஆம் ஆண்டு தமிழில் கார்த்தியுடன் பையா படத்தில் நடித்தார்.அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது.பின் விஜயுடன் சுறா படத்திலும் ,ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி படத்திலும் நடித்தார்.இவ்விரண்டு படங்களும் ஓரளவிற்கு ஓடின.

2011 ஆம் ஆண்டு கார்த்தியுடன் சிறுத்தை , தனுசுடன் வேங்கை,தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் பத்ரிநாத்,நாகசைத்தன்யா வுடன் 100% லவ் ஆகிய படங்களில் நடித்தார்.100%லவ் படம் மாபெரும் வெற்றியடைந்தது.அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னனி கதாநாயகியானார்.முன்னனி நடிகர்களுடன் ஜோடியாக தொடந்து நடித்தார்.

2012 ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர் உடன் ஊசரவள்ளி,ராமுடன் எந்துகன்டே பிரேமந்தா,பிரபாசுடன் ரிபெல்,ராம்சரணுடன் ராச்சா, பவன்கல்யான் ஜோடியாக ஒரு படத்திலும் நடித்தார்.அனைத்தும் வெற்றிப்படங்கள்.

எட்டு வருடங்களுக்குப் பிறகு 2013 ஆம் இந்தியில் ஹிம்மாத்வாளா படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடித்தார்.பின் இரண்டாவது முறை நாகசைத்தன்யாவுடன் தடகா படத்தில் நடித்தார்.தமிழில் அஜித்குமார் ஜோடியாக வீரம் படத்தில் நடித்தார்.

2014 ஆம் ஆண்டு ஹம்சக்கல்ஸ் படத்தில் சயிப் அலி கான் ஜோடியாக நடித்தார்.அக்ஷய்குமார் ஜோடியாக என்டர்டெயின்மன்ட் படத்தில் நடித்தார்.தெலுங்கில் அல்லுடுசீனு படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.பின்னர் தொடர்ந்து அயிட்டம் நம்பரானார்.மகேஷ் பாபு ஜோடியாக ஆகடு படத்தில் நடித்தார்.

2015 ஆம் ஆண்டு ராஜமவுளி இயக்கத்தில் பாகுபலி படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்தார்.அந்த படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்து 600 கோடி வசூலைக் குவித்தது.சீனாவிலும் அப்படம் வெளியானது.தமன்னாவிற்கும் பாராட்டுக்கள் குவிந்தன.

பின்னர் ஆர்யாவுடன் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில் நடித்தார்.இஞ்சி இடுப்பழகி,நண்பேன்டா படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.

பாகுபலியின் வெற்றியைத் தொடர்ந்து தமன்னாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன.ரவி தேஜாவுடன் பெங்கால் டைகர் படத்தில் நடித்தார்.

ஹிந்தியில் ரன்வீர் சிங்குடன் ஒரு குரும்படத்தில் நடித்தார்.

2016 ஆம் ஆண்டு கார்த்தியுடன் தோழா படத்தில் நடித்தார்.கார்த்தியுடன் அவர் நடிக்கும் மூன்றாவது படம் இது.அந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக ஆனது.தெலுங்கில் ஓபிரி என்ற பெயரில் வெளியானது.ஸ்பீடுன்னாடு,ஜாகுவார் ஆகிய படங்களில் குத்தாட்டம் போட்டார்.தேவி படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்த படம் வெற்றியடைந்தது.தெலுங்கில் அப்கிநேத்ரி என்றும் , ஹிந்தியில் டூடக் டூடக் டூட்டியா என்றும் அப்படம் வெளியானது.விஷாலுடன் கத்திசண்டை படத்தில் நடித்தார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜயசேதுபதி ஜோடியாக நடித்த தர்மதுரை படம் 100 நாட்கள் ஓடி வெற்றிப்படமாக அமைந்து.

2017 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் பாகுபலியின் இரண்டாம் பாகம் வெளியாகி 2000 கோடி வசூல் ஈட்டி சாதனைப்படைத்தது.ஜெய் லவ குசா படத்தில் குத்தாட்டம் போட்டார்.ஆர்யாவுடன் அஅஅ படத்தில் நடித்தார்.

2018ஆம் ஆண்டு விக்ரம் ஜோடியாக ஸ்கெட்ச் படத்தில் நடித்தார்‌.மராத்தியில் அஅ பப கக படத்தில் சுனில் ஷெட்டியுடன் நடித்தார்.தெலுங்கில் நா நுவ்வே , நெக்ஸ்ட் என்டி படங்கள் தோல்வியடைந்தன.

மாபெரும் வெற்றி பெற்ற கே.ஜி.எஃப் படத்தில் குத்தாட்டம் போட்டு பாராட்டுகளைப் பெற்றார்.

2019 ஆம் ஆண்டு வெங்கடேசுடன் நடித்த எஃப் 2 படம் 180 கோடி வசூல் செய்து தமன்னாவிற்கு பாராட்டுகள் குவிந்தன.தமிழில் உதயநிதியுடன் கண்ணே கலைமானே படம் வெளியானது.

தேவி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.அந்த படம் மே 31 2019 அன்று வெளியானது.தெலுஙகில் அப்கிநேத்ரி 2 என்ற பெயரில் அதே நாளில் வெளியானது.

ஹிந்தியில் காமோஷி என்ற படம் ஜூன் 14 ,2019 அன்று வெளியானது.அந்தபடம் தமிழில் நயன்தாரா நடிக்கும் கொலையுதிர் காலம் என்ற படத்தின் பதிப்பாகும்.

சிரஞ்சீவி ஜோடியாக சயிரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்கிறார்.

ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ளார்.அப்படம் வெளிவர தயாராக உள்ளது.

தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் ஜோடியாக நடித்து வருகிறார்.

F2 வெற்றியை தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.தமிழில் புதுமுக இயக்குநர் இயக்கும் படத்தில் விஷாலுக்கு வில்லியாக நடிக்கவுள்ளார்.

அதே கண்கள் படத்தை இயக்கிய இளம் இயக்குநர் ரோகின் வெங்கடேஷன் இயக்கும் திகில் படத்தில் நடிக்கவுள்ளார்.

பாலிவுட்டில் நவாசுதின் சித்திக் ஜோடியாக "போலி சூடியான் " படத்தில் நடிக்கிறார்.

திரைப்படங்கள்:

✝ - வெளியாகாத படங்கள்

ஆண்டு திரைப்படம்வேடம்மொழி இணை நடிகர் குறிப்புகள்
2005 1 சாந்த் சே ரோசன் செகராசியாஇந்தி சமீர் அஃப்தப் இந்தியில் முதல் படம்
2 சிறீசந்தியாதெலுங்கு மனோஜ் மன்ஜு தெலுங்கில்

முதல் படம்

2006 3 கேடிபிரியங்காதமிழ் ரவி கிருஷ்ணா தமிழில் முதல் படம்
4 ஜடோ பிரியங்கா தெலுங்கு ரவி கிருஷ்ணா
2007 5 வியாபாரிசாவித்திரிதமிழ் எஸ். ஜே. சூர்யா, சீீதா
6 ஏப்பி டேய்சுமதுதெலுங்கு வருண் சந்தேஷ்
7 கல்லூரிசோபனாதமிழ் அகில் முன்மொழிவு: பிலிம்பேர் சிறந்த நடிகை விருது
2008 8 காளிதாசு அர்ச்சனாதெலுங்கு சுசாந்த்
9 ரெடிஸ்ப்னா தெலுங்கு ராம் சிறப்புத் தோற்றம்
10 நேற்று இன்று நாளைஅவராகவேதமிழ் ரவி கிருஷ்ணா
11 நின்னே நேனு ரேபு அவராகவே தெலுங்கு ரவி கிருஷ்ணா
2009 12 படிக்காதவன்காயத்ரிதமிழ் தனுஷ்
13 கொஞ்சம் இஸ்டம் கொஞ்சம் கஸ்டம்கீதாதெலுங்கு சித்தார்த்
14 அயன்யமுனாதமிழ் சூர்யா,பிரபு
15 ஆனந்த தாண்டவம்மதுமிதாதமிழ் சித்தார்த் வேணுகோபால்,ரிஷி
16 கண்டேன் காதலைஅஞ்சலிதமிழ் பரத்
2010 17 பையாசாருலதாதமிழ் கார்த்தி
18 சுறாபூர்ணிமாதமிழ் விஜய்
19 தில்லாலங்கடிநிஷாதமிழ் ஜெயம் ரவி
2011 20 கோ அவராகவே தமிழ் ஜீவா,அஜ்மல் சிறப்புத் தேற்றம்
21 சிறுத்தைஸ்வேதாதமிழ் கார்த்தி
22 பத்ரிநாத்அலக்நந்தா தெலுங்கு அல்லு அர்ஜுன்
23 100% காதல்மகாலக்ஷ்மி தெலுங்கு நாக சைதன்யா
24 வேங்கைராதிகாதமிழ் தனுஷ்
2012 25 ஊசரவள்ளி நிகாரிகா தெலுங்கு ஜூனியர் என்டிஆர்
26 எந்துகன்டே பிரேமந்த்தா சரஸ்வதி\சிறீநிதி தெலுங்கு ராம்
27 ரிபெல் நந்தினி தெலுங்கு பிரபாஸ்
28 ராச்சா நந்தினி தெலுங்கு ராம் சரண், அஜ்மல்
29 கேமராமேன் கேங்தோ ராம்பாபு கங்கா தெலுங்கு பவன் கல்யாண்
2013 30 ஹிம்மாத்வாளா ரேகா ஹிந்தி அஜய் தேவ்கான்
31 தடகா பல்லவி தெலுங்கு நாக சைதன்யா,ஆண்ட்ரியா ஜெரெமையா
32 வீரம் கோப்பெருந்தேவி தமிழ் அஜித் குமார்
2014 33 ஹம்சக்கல்ஸ் சந்தியா இந்தி சைஃப் அலி கான்,ரித்தேஷ் தேஷ்முக்,பிபாசா பாசு
34 அல்லுடு சீனு அவராகவே தெலுங்கு பெல்லம்கொண்ட ஸ்ரீீீநிவாஸ் "லாபர் பொம்மா" பாடலில் சிறப்பு நடனம்
35 எண்டர்டெய்ன்மன்ட் சாக்ஷி ஹிந்தி அக்‌ஷய் குமார்
36 ஆகடு சரோஜா தெலுங்கு மகேஷ் பாபு
2015 37 நண்பேன்டா அவராகவே தமிழ் உதயநிதி ஸ்டாலின்,நயன்தாரா சிறப்புத் தோற்றம்
38 பாகுபலி அவந்திகா தமிழ்

இந்தி

பிரபாஸ்,அனுசுக்கா செட்டி, ராணா டகுபதி,]],ரம்யா கிருஷ்ணன்,நாசர், சத்தியராஜ், சுதீப் 200 கோடி வசூல் - உலக அளவில் வெற்றி-உலக மொழிகளில் மொழி மாற்றம்
39 வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க ஐஸ்வர்யா பாலகிருஷ்னன் தமிழ் ஆர்யா,பானு
40 சயிஸ் ஜீரோ அவராகவே தெலுங்கு ஆர்யா, அனுசுக்கா செட்டி சிறப்புத் தோற்றம்
41 இஞ்சி இடுப்பழகி அவராகவே தமிழ் ஆர்யா,அனுசுகா செட்டி சிறப்புத் தோற்றம்
42 பெங்கால் டைகர் மீரா தெலுங்கு ரவி தேஜா,ராசி கன்னா
43 ரன்வீர் சிங் ரிடன்ஸ் அவராகவே ஹிந்தி ரன்வீர் சிங் குறும்படம்
2016 44 ஸ்பீடுன்னாடு அவராகவே தெலுங்கு பெல்லம் கொண்ட ஸ்ரீீீநிவாஸ் "பேஞ்சுலர் பாபு" பாடலில் சிறப்பு நடனம்
45 ஓபிரி கீர்த்தி தெலுங்கு கார்த்திக் சிவகுமார்,அக்கினேனி நாகார்ஜுனா
46 தோழா கீர்த்தி தமிழ் கார்த்தி,நாகார்ஜுனா
47 தர்மதுரை சுபாஷினி தமிழ் விஜய் சேதுபதி,ஐஸ்வர்யா ராஜேஷ்,ராதிகா சரத்குமார் 100 நாட்கள் ஓடியது
48 ஜாகுவார் அவராகவே தெலுங்கு நிகில் கவுடா "மந்தார தைலம்" பாடலில் சிறப்பு நடனம்
49 ஜேங்வார் அவராகவே கன்னடம் நிகில் கவுடா "சேம்பேஞ் என்னே" பாடலில் சிறப்பு நடனம்
50 தேவி தேவி/ரூபி தமிழ் பிரபுதேவா,சோனு சூத்,ஏமி சாக்சன்,ஆர். ஜே. பாலாஜி
51 அப்கிநேத்ரி தேவி/ரூபி தெலுங்கு பிரபுதேவா,சோனு சூத்
52 டூடக் டூடக் டூடியா தேவி/ரூபி ஹிந்தி பிரபுதேவா,சோனு சூத்
53 கத்தி சண்டை திவ்யா தமிழ் விஷால்,ஜெகபதி பாபு,நிரோஷா
2017 54 பாகுபலி 2 அவந்திகா தமிழ்

தெலுங்கு

ஹிந்தி

பிரபாஸ்,அனுஷ்கா 2000 கோடி வசூல் - உலக அளவில் மாபெரும் வெற்றி
55 அன்பானவன் அசராதவன் அடங்காதன் ரம்யா தமிழ் சிம்பு,சிரேயா சரன்
56 ஜெய் லவ குசா அவராகவே தெலுங்கு ஜூனியர் என்டிஆர் "ஸ்விங் சரா" பாடலில் சிறப்பு நடனம்
2018 57 ஸ்கெட்ச் அமுதவள்ளி தமிழ் விக்ரம்
58 ஏஏ பிபி காகா அவராகவே மராத்தி சுனில் ஷெட்டி
59 நா நுவ்வெ மீரா தெலுங்கு கல்யாண் ராம்
60 நெக்ஸ்ட் ஏண்டி? டேம்மி தெலுங்கு சந்தீப் கிசன்
61 கே ஜி எஃப் - அத்தியாயம் 1 மில்க்கி கன்னடம் யாஷ் "ஜோக்கே நன்னு" பாடலில் சிறப்பு நடனம்
2019 62 எஃப் 2 - ஃபன் அண்ட் ஃப்ரஸ்ட்ரேசன் ஹரிகா தெலுங்கு வெங்கடேஷ், மெஹ்ரின் 120 கோடி வசூல்
63 கண்ணே கலைமானே பாரதி தமிழ் உதயநிதி ஸ்டாலின்,வடிவுக்கரசி,வசுந்தரா
2019 64 தேவி 2 தேவி/ரூபி தமிழ் பிரபுதேவா,நந்திதா,சாருக் கான்
65 அப்கிநேத்ரி 2 தேவி/ரூபி தெலுங்கு பிரபுதேவா,நந்திதா,சாருக் கான்
66 காமோஷிசுர்பி இந்தி பிரபுதேவா,பூமிகா சாவ்லா
67 சயிரா நரசிம்ம ரெட்டி இலட்சுமி தெலுங்கு சிரஞ்சீவி, நயன்தாரா,அமிதாப் பச்சன்,விஜய் சேதுபதி
68 பெட்ரோமாக்ஸ் மீரா தமிழ் யோகி பாபு
69 ஆக்ஷன் தியா தமிழ் விஷால்
70 போலே சூதியா ✝ அறிவிக்கப்படவில்லை ஹிந்தி அனுராக் காஷ்யப்,நவாசுதீன் சித்திக் படப்பிடிப்பு
71 சரிலேரு நீக்கெவரு தெலுங்கு மகேஷ் பாபு படப்பிடிப்பு
72 பெயரிடப்படாத படம் தெலுங்கு கோபிசந்த் படப்பிடிப்பு
73 பெயரிடப்படாத படம் தமிழ் படப்பிடிப்பு
74 ஜிகர்தன்டா ரீமேக் இந்தி கார்திக் ஆர்யன் படப்பிடிப்பு
75 தட் இஸ் மகாலக்ஷ்மி ✝ மகாலக்ஷ்மி தெலுங்கு தாமதம்

சான்றுகள்

  1. "Tamanna Bhatia - Actress". Nilacharal.com (1989-12-21). பார்த்த நாள் 2012-10-09.
  2. Sify (21 December 2009). "Happy B'day to the Queen of K’wood!". Sify. பார்த்த நாள் 2010-04-17.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.