ஆண்ட்ரியா ஜெரெமையா

ஆண்ட்ரியா ஜெரெமையா (ஆங்கிலம்: Andrea Jeremiah) (தோற்றம்: டிசம்பர் 21, 1985) பின்னணிப் பாடகியும் பின்னணிக் குரல் கொடுப்பவரும் நடிகையும் ஆவார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் இவரை நடிகையாக உயர்த்தின.

ஆண்ட்ரியா ஜெரெமையா
இசை நிகழ்ச்சியொன்றில் ஆண்ட்ரியா ஜெரெமையா
பிறப்புஆண்ட்ரியா ஜெரெமையா
திசம்பர் 21, 1985 (1985-12-21)
அரக்கோணம், தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிபின்னணிப் பாடகர், நடிகை, பின்னணிக் குரல் கொடுப்பவர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2007—தற்போது

வாழ்க்கை

ஆண்ட்ரியா, சென்னையிலுள்ள, அரக்கோணத்தில், ஆங்கில-இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர்.[1] இவர், நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் கல்வி பயின்றார்.[2] இவருடைய தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.[3] இவருடைய இளைய தங்கை, பெல்சியத்திலுள்ள இலெவன் நகரத்தில் துணை ஆய்வாளராக உள்ளார்.[3] ஆண்ட்ரியா தன்னுடைய பத்து வயது முதல், யங் இசுடார்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். இவர் கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார்.[4][5] இவர், வாழும் கலை மற்றும் கலைஞர்களுக்காகத் த சோ மஸ்ட் கோ ஆன் (The Show Must Go On-TSMGO Productions) என்ற அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார்.[6]

பின்னர், திரைப்படங்களில் பாடல்கள் பாடுவதைத் தொழிலாகச் செய்தார். கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு,[2] அவருடைய அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.[5] பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் சேம்சு சீகலின் ஆங்கில நாவலான தீரெயில்டுவின் கதையைக் கொண்டது.[7] ஆண்ட்ரியா கல்யாணி வெங்கடேசாகவும் தன்னுடைய கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதால், பிணையக் கைதியாக நடித்தார். சிம்ரன், சோபனா, தபு உள்ளிட்ட நடிகைகளின் நிராகரிப்புக்குப்பின் இக்கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7][8] அதன் பிறகு, செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார்.[5] 2011-ம் ஆண்டு, இவர், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஆகத்து 2011இல் வெளியான மங்காத்தா திரைப்படத்திலும் நடித்தார்.[9] பிறகு, கமல்ஹாசனுடன், விஸ்வரூபம் திரைப்படத்திலும், வெற்றிமாறனின், வட சென்னை திரைப்படத்திலும் நடித்தார்.[10]

நடிகையாக

வருடம்திரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்புகள்
2005கண்ட நாள் முதல்தமிழ்சிறப்புத் தோற்றம்
2007பச்சைக்கிளி முத்துச்சரம்கல்யானி வெங்கடேஷ்தமிழ்பரிந்துரைக்கப்பட்டவை - சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதுகள்
2010ஆயிரத்தில் ஒருவன்லாவன்யா சந்திரமெளலிதமிழ்பரிந்துரைக்கப்பட்டவை - சிறந்த துனை நடிகைக்கான பிலிம்பேர் விருதுகள்
2011மங்காத்தாசபிதா ப்ரித்விராஜ்தமிழ்
2012ஒரு கல் ஒரு கண்ணாடிதமிழ்சிறப்புத் தோற்றம்
2012புதிய திருப்பங்கள்தமிழ்படப்பிடிப்பில்
2012வட சென்னைதமிழ்படப்பிடிப்பில்
2013விஸ்வரூபம் (2013 திரைப்படம்)அஸ்மிதா சுப்பிரமணியம்தமிழ்
2014விஸ்வரூபம் 2 ( 2014 திரைப்படம் )அஸ்மிதா சுப்பிரமணியம்தமிழ்படப்பிடிப்பில்
2017தரமணிஆல்த்தியா ஜான்சன்தமிழ்
2017அவள்லஷ்மிதமிழ்

பின்னணிப் பாடகியாக

வருடம்பாடல்திரைப்படம்மொழிஇசையமைப்பாளர்
2005கண்ணும் கண்ணும் நோக்கியாஅந்நியன்தமிழ்ஹாரிஸ் ஜயராஜ்
2006வீ ஹேவ் எ ரோமியோபொமரில்லுதெலுங்குதேவி ஸ்ரீ பிரசாத்
2006கற்க கற்கவேட்டையாடு விளையாடுதமிழ்ஹாரிஸ் ஜயராஜ்
2006சர சரராக்கிதெலுங்குதேவி ஸ்ரீ பிரசாத்
2006கிலிதேசமுத்துருதெலுங்குசக்ரி
2008ஓஹ் பேபி ஓஹ் பேபியாரடி நீ மோகினிதமிழ்யுவன் சங்கர் ராஜா
2008நேனு நீ ராஜாகிங்தெலுங்குதேவி ஸ்ரீ பிரசாத்
2009அம்மாயிலு அப்பாயிலுகரண்ட்தெலுங்குதேவி ஸ்ரீ பிரசாத்
2010மாலை நேரம்ஆயிரத்தில் ஒருவன்தமிழ்ஜி. வி. பிரகாஷ் குமார்
2010ஓஹ் ஈசா
2010ஏனோ ஏனோஆதவன்தமிழ்ஹாரிஸ் ஜயராஜ்
2010தீராத விளையாட்டு பிள்ளைதீராத விளையாட்டு பிள்ளைதமிழ்யுவன் சங்கர் ராஜா
2010இது வரைகோவாதமிழ்யுவன் சங்கர் ராஜா
2010பூக்கள் பூக்கும்மதராசபட்டினம்தமிழ்ஜி. வி. பிரகாஷ் குமார்
2010தேடியே தேடியேதமிழ்ஜி. வி. பிரகாஷ் குமார்
2010ஹூ இஸ் த ஹீரோ?மன்மதன் அம்புதமிழ்தேவி ஸ்ரீ பிரசாத்
2010நா பேரே மல்லீஸ்வரிசையி ஆட்டாதெலுங்குதேவி ஸ்ரீ பிரசாத்
2011எனக்காக உனக்காககாதல் 2 கல்யானம்தமிழ்யுவன் சங்கர் ராஜா
2011நோ மணி நோ ஹனிவானம்தமிழ்யுவன் சங்கர் ராஜா
2011திவாலி தீபானிதாதாதெலுங்குதேவி ஸ்ரீ பிரசாத்
2011காதலிக்கவெடிதமிழ்விஜய் ஆண்டனி[11]
2011ஒரு முறைமுப்பொழுதும் உன் கற்பனைகள்தமிழ்ஜி. வி. பிரகாஷ் குமார்[12]
2012யேலேலோமெரீனா தமிழ்கிரீஷ்

பின்னணிக் குரல் கொடுப்பவராக

வருடம்திரைப்படம்பிண்ணனி குரல்
2006வேட்டையாடு விளையாடுகமாலினி முகர்ஜி
2010ஆடுகளம்டாப்ஸி[13]
2012நண்பன்இலியானா[14]

குறிப்புகள்

  1. "Andrea | Tamil Actress Andrea Jeremiah | TSMGO Productions | Interview - Interviews". CineGoer.com (2011-05-26). பார்த்த நாள் 2011-09-22.
  2. "Glam show is not bad: Andrea Jeremiah". Sify.com. பார்த்த நாள் 2011-09-22.
  3. Chowdhary, Y. Sunitha (2011-05-25). "Andrea tests new waters in Tollywood". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/life-and-style/metroplus/article2047642.ece.
  4. "For Andrea, the show must go on". Chennai, India: The Hindu. 2006-01-18. http://www.hindu.com/2006/01/18/stories/2006011804240200.htm. பார்த்த நாள்: 2008-11-17.
  5. "My first break - Andrea Jeremiah". The Hindu (Chennai, India). 2009-06-19. http://www.hindu.com/cp/2009/06/19/stories/2009061950311600.htm.
  6. "The show just went on...". Chennai, India: The Hindu. 2006-01-23. http://www.hindu.com/mp/2006/01/23/stories/2006012300440100.htm. பார்த்த நாள்: 2008-11-17.
  7. "Gautham on Pachai Kili Muthucharam - Bollywood Movie News". IndiaGlitz. பார்த்த நாள் 2011-09-22.
  8. "Welcome to". Sify.com (2007-01-20). பார்த்த நாள் 2011-09-22.
  9. "Andrea Strikes Back In Style! - Irandam Ulagam - Selvaraghavan - Dhanush - Andrea - Richa - Tamil Movie News". Behindwoods.com (2011-05-16). பார்த்த நாள் 2011-09-22.
  10. http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/andrea-jeremiah-kamal-haasan’s-viswaroopam-465
  11. http://www.southdreamz.com/2011/09/vedi-music-review.html
  12. http://www.indiaglitz.com/channels/tamil/musicreview/12779.html
  13. http://www.cinehour.com/gossips/kollywood/23954/andreas-new-avatar-as-a-dubbing-artiste.html
  14. http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/andrea-turns-dubbing-artiste-377

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.