வெற்றிமாறன்

வெற்றிமாறன் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது முதல் திரைப்படமான பொல்லாதவன் நடப்பு நிலைக்கு மிக அண்மையாகப் படம்பிடித்துக் காட்டியதற்காக மிகவும் பாராட்டைப் பெற்றது. இவரது இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

வெற்றிமாறன்

2015 கோவா திரைபடவிழாவில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது
இயற் பெயர் வெற்றிமாறன்
பிறப்பு 4 செப்டம்பர் 1975
கடலூர்
தொழில் திரைப்பட இயக்குனர்
நடிப்புக் காலம் 2007 – நடப்பு
துணைவர் ஆர்த்தி

கல்வி

இவர் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். ஆங்கில முதுகலைப் பட்டம் முடிக்கும் தருவாயில்,தனது பதினைந்து வயதிலேயே சினிமா மீதான ஆர்வம் இவருக்கு வந்துவிட்டது. ஆனால் அதை வெளிப்படுத்துகிற துணிச்சல் மட்டும் இல்லாமல் இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்து சென்னை லயோலா கல்லூரியில் சேரும்போதுதான், அதற்கான தருணம் வாய்த்தது. அந்த தைரியத்தை பேராசிரியர் ச. ராஜநாயகம் கொடுத்திருக்கிறார். . 'சினிமாதான் உன் எதிர்காலம் என்று நினைத்தால் அதில் ஈடுபடு' என்று உற்சாகமாகப் பேசியிருக்கிறார். இவரது இந்தப் பயணத்திற்கு தொடக்கமாக ச.ராஜநாயகம் இருந்துள்ளார்.[1] அவரே வெற்றிமாறனை இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகவும் சேர்த்துவிட்டார். பாலுமகேந்திராவிடம், கதை நேரம் தொலைக்காட்சித் தொடரில் பணியாற்ற கல்லூரி படிப்பை நிறுத்தினார். இவர் திரைப்படக்கலையைப் பாலுமகேந்திராவிடம் முதன்மையாகக் கற்றார்.

சொந்த வாழ்க்கை

வெற்றி மாறனின் மனைவி பெயர் ஆர்த்தி. கல்லூரி காலத்து காதல். இவர்களுக்கு பூந்தென்றல் என்ற மகள் உண்டு.[2]

இயக்கிய திரைப்படங்கள்

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் இயக்குநர் தயாரிப்பாளர் விருதுகள்
2007 பொல்லாதவன் Y N விஜய் விருதுகள் (சிறந்த இயக்குநர்)
2011 ஆடுகளம் (திரைப்படம்) Y N தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குனர்களின் பட்டியல்
சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது
சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
1 ஆவது தென்னிந்திய தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்
விஜய் விருதுகள் (சிறந்த இயக்குநர்)
2013 உதயம் என்.எச்4 (திரைப்படம்) N Y
நான் ராஜாவாகப் போகிறேன் N Y வசனகர்த்தா
2014 பொறியாளன் (திரைப்படம்) N Y
2015 காக்கா முட்டை (திரைப்படம்) N Y சிறந்த குழந்தை திரைப்படத்திற்காகன தேசிய விருது
சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ்
எடிசன் விருதுகள்
2016 விசாரணை (திரைப்படம்) Y Y சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
ஆனந்த விகடன் - சிறந்த இயக்குனர்
கொடி (திரைப்படம்) N Y
2017 லென்ஸ் N Y
2018 அண்ணனுக்கு ஜே (2018 திரைப்படம்) N Y
வட சென்னை (திரைப்படம்) Y Y ஆனந்த விகடன் திரைப்பட விருதுகள் - சிறந்த
2019 அசுரன் Y N அறிவிப்பு

திரைக்கதை பங்களிப்புகள்

விருதுகள்

மேற்கோள்கள்

  1. http://kadaitheru.blogspot.in/2011/02/blog-post_08.html
  2. "வெற்றி மாறன் சீக்ரெட்ஸ்". Vikatan. 4 September 2016. http://www.vikatan.com/cinema/tamil-cinema/68015-unknown-facts-about-director-vetrimaaran.html. பார்த்த நாள்: 11 February 2017.
  3. ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள்,விஜய் அவார்ட்ஸ் ~ பொல்லாதவன் 2007, 2011 ஆடுகளம் சிறந்த இயக்குநர், பிலிம்பேர், தேசிய விருது, சைமா விருதுகள் , விஜய் அவார்ட்ஸ், 2015_ காக்கா முட்டை சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படம் ., பிலிம்பேர் சிறந்த தயாரிப்பாளர் , எடிசன் அவார்ட்ஸ், 2016 விசாரணை தேசிய விருது, விகடன் விருது அணுக்கம் 04-04-2017
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.