வட சென்னை (திரைப்படம்)
வட சென்னை (Vada Chennai) வெளிவந்துள்ள தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இது வடசென்னை பகுதியில் உள்ள மக்களின் 35 ஆண்டுகால வாழ்க்கையைப் பற்றிய கதையாகும். இதில் தனுஷ் கேரம் வீரராக முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா தயாரிப்பகம், தனுஷின் உண்டர்பார் நிறுவனம் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் பேக்டரி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இதில் சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1][2] இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் 2011 ஆம் ஆண்டில் வெளியானது. மார்ச் 2012 இல் படப்பிடிப்பு துவங்கியது.[3]
வட சென்னை | |
---|---|
![]() சுவரொட்டி | |
இயக்கம் | வெற்றிமாறன் |
தயாரிப்பு | தனுஷ் (நடிகர்) |
கதை | வெற்றிமாறன் |
இசை | சந்தோஷ் நாராயணன் |
நடிப்பு | தனுஷ் அமீர் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆண்ட்ரியா ஜெரெமையா |
ஒளிப்பதிவு | வேல்ராஜ் |
படத்தொகுப்பு | ஜி. பி. வெங்கடேஷ் |
கலையகம் | உண்டர்பார் பிலிம்ஸ் |
விநியோகம் | லைக்கா தயாரிப்பகம் |
வெளியீடு | அக்டோபர் 17, 2018 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- தனுஷ் - அன்பு
- ஐஸ்வர்யா ராஜேஷ் - பத்மா
- ஆண்ட்ரியா ஜெரெமையா - சந்திரா
- சமுத்திரக்கனி - குணா
- அமீர் - ராஜன்
- டேனியல் பாலாஜி - தம்பி
- கிஷோர் - செந்தில்
- பவன் - வேலு
தயாரிப்பு
லைக்கா நிறுவனமும், உண்டர்பார் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.[4]
சான்றுகள்
- "Andrea in Vada Chennai". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 November 2011. http://articles.timesofindia.indiatimes.com/2011-11-29/news-interviews/30459213_1_andrea-vetri-maaran-new-film/. பார்த்த நாள்: 15 December 2011.
- "Dhanush resumes Vada Chennai now" (in en-US). Top 10 Cinema. 12 April 2017. https://www.top10cinema.com/article/42161/dhanush-resumes-vada-chennai-now.
- "Vetrimaran's Vada Chennai announced". Sify (1 December 2011). பார்த்த நாள் 15 December 2011.
- "Listen Vada chennai Teaser Theme". https://www.raaga.com/tamil/movie/Vada-Chennai-songs-T0004686-play.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.