தனுஷ் (நடிகர்)

தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான அவரது முதற் திரைப்படமான துள்ளுவதோ இளமையில் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். பாரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான திருடா திருடி மற்றும் தேவதையைக் கண்டேன் போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார். இவர் ஆடுகளம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றார். 3 என்ற தமிழ் திரைப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு இறுதியில் இவர் பாடிய வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டதால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பேசப்பட்டார்.

தனுஷ் (நடிகர்)
2013ஆவது ஆண்டில் நடைபெற்ற தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் விழாவில் நடிகர் தனுஷ்
பிறப்புகஸ்தூரிராஜா[1]
28 சூலை 1983 (1983-07-28)[2]
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குனர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2002–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ஐசுவர்யா ரஜினிகாந்த் தனுஷ்
(2004–தற்போது வரை)
பிள்ளைகள்யாத்ரா (பி 2006)
லிங்கா (பி 2010)
விருதுகள்சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருது (2011)

தனுஷ் தனது உண்டர்பார் ஃபிலிம்ஸ் மூலமாக படம் தயாரிக்கிறார்.இவருக்கு சிறந்த நடிகர் விருது மட்டுமல்லாமல் இவருடைய தயாரிப்பில் வெளிவந்த விசாரனை படத்திற்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.இவர் ஏழு முறை ஃபிலிம் ஃபேர் விருது வென்றுள்ளார்.

சொந்த வாழ்க்கை

தனுஷ், தமிழ்த் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனும், இயக்குநர் செல்வராகவனின் இளைய சகோதரரும் ஆவார். இவர், 2004-ஆம் ஆண்டில், நடிகர் ரஜனிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.[3]

திரைப்பட வரலாறு

நடிகராக

2000த்தில்

ஆண்டுதிரைப்படம்பாத்திரம்மொழிகுறிப்பு
10.05.2002துள்ளுவதோ இளமைமகேஷ்தமிழ்
04.07.2003காதல் கொண்டேன்வினோத்தமிழ்பரிந்துரை, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
05.09.2003திருடா திருடிவாசுதமிழ்
14.01.2004புதுக்கோட்டையிலிருந்து சரவணன்சரவணன்தமிழ்
23.07.2004சுள்ளான்சுப்பிரமணி (சுள்ளான்)தமிழ்
12.11.2004ட்ரீம்ஸ்சக்திதமிழ்
14.01.2005தேவதையைக் கண்டேன்பாபுதமிழ்
01.09.2005அது ஒரு கனாக்காலம்சீனுதமிழ்
26.05.2006புதுப்பேட்டைகொக்கி குமார்தமிழ்
15.12.2006திருவிளையாடல் ஆரம்பம்திருக்குமரன்தமிழ்
27.04.2007பரட்டை என்கிற அழகுசுந்தரம்அழகுசுந்தரம்தமிழ்
08.11.2007பொல்லாதவன்பிரபுதமிழ்பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த நடிகர்)
04.042008யாரடி நீ மோகினிவாசுதமிழ்வெற்றி : விஜய் விருதுகள் (இந்த ஆண்டின் கேளிக்கையாளர்)
பரிந்துரை: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
பரிந்துரை: விஜய் விருதுகள் (சிறந்த நடிகர்)
01.08.2008குசேலன்அவராகவேதமிழ்கவுரவ தோற்றம்
14.01.2009படிக்காதவன்ராதாகிருஷ்ணன்(ராக்கி)தமிழ்

2010 களில்

இன்னும் வெளியாகாத திரைப்படங்கள்
வருடம்திரைப்படம்பாத்திரம்மொழிகுறிப்பு
14.01.2010குட்டிகுட்டிதமிழ்
05.11.2010உத்தமபுத்திரன்சிவாதமிழ்
14.01.2011ஆடுகளம்கே.பி.கருப்புதமிழ்வெற்றி, சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது
25.02.2011சீடன் (2011 திரைப்படம்)சரவணன்தமிழ்கவுரவ தோற்றம்
08.04.2011மாப்பிள்ளைசரவணன்தமிழ்
08.07.2011வேங்கைசெல்வம்தமிழ்
25.11.2011மயக்கம் என்னகார்த்திக்தமிழ்
30.03.20123 (திரைப்படம்)ராம்தமிழ்
25.01.2013கமத்&கமத்மலையாளம்கவுரவ தோற்றம்
01.05.2013எதிர்நீச்சல்தமிழ்கவுரவ தோற்றம்
28.06.2013அம்பிகாபதி (ராஞ்சனா)குந்தன்இந்தி, தமிழ்
19.07.2013மரியான்மரியான் விஜயன் ஜோசப்தமிழ்
11.10.2013நய்யாண்டிசின்ன வண்டுதமிழ்
2014வேலையில்லா பட்டதாரிரகுவரன் தமிழ்
2015அனேகன்முருகப்பன்,இளமாறன்,காளி,அஷ்வின் தமிழ்
2015ஷமிதாப்இந்தி
2015மாரிமாரி தமிழ்
2016தங்க மகன் தமிழ்
2016தொடரிபூச்சியப்பன் தமிழ்
2016கொடிகொடி , அன்பு தமிழ்2016 தீபாவளி வெளியீடு
2017வேலையில்லா பட்டதாரி 2ரகுவரன் தமிழ்
2018The Extraordinary Journey of the FakirAjatashatru (Aja)ஆங்கிலம்-பிரெஞ்சு திரைப்படம்
2018வட சென்னைஅன்புதமிழ்
2018 மாரி மாரி தமிழ்
2018 என்னை நோக்கி பாயும் தோட்டாதமிழ்

தயாரிப்பாளராக

வருடம்திரைப்படம்இயக்குனர்குறிப்புகள்
20123ஐஸ்வர்யா தனுஷ்
2013எதிர்நீச்சல்ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்
2014காக்கா முட்டைமணிகண்டன்
2014வேலையில்லா பட்டதாரிவேல்ராஜ்
2015காக்கி சட்டைஆர்.எஸ்.துரை செந்தில்குமார்
2015நானும் ரவுடி தான்விக்னேஷ் சிவன்

பாடகராக

வருடம்பாடல்(கள்)திரைப்படம்இசையமைப்பாளர்குறிப்புகள்
2004நாட்டு சரக்குபுதுக்கோட்டையிலிருந்து சரவணன்யுவன் சங்கர் ராஜா
2005துண்ட காணும்தேவதையைக் கண்டேன்தேவா
2006எங்க ஏரியா உள்ள வராதபுதுப்பேட்டையுவன் சங்கர் ராஜா
2010உன் மேல ஆசைதான்ஆயிரத்தில் ஒருவன்ஜி.வி.பிரகாஷ்
2011ஓட ஓட ஓட தூரம் & காதல் என் காதல்மயக்கம் என்னஜி.வி.பிரகாஷ்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.