முரளி (மலையாள நடிகர்)

முரளி (மலையாளம்: മുരളി, (மே 25, 1954 - ஆகஸ்ட் 6, 2009) இந்தியாவின் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற மலையாள நடிகர். மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

முரளி
பிறப்பு மே 25, 1954(1954-05-25)
குடவத்தூர், கொல்லம்,
கேரளம், இந்தியா
இறப்பு ஆகத்து 6, 2009(2009-08-06) (அகவை 55)
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 1986 - 2009
பெற்றோர் கிருஷ்ணபிள்ளை
தேவகி அம்மா

வாழ்க்கைக் குறிப்பு

கேரள மாநிலத்தில் கொல்லத்தில் பிறந்த முரளி ஆரம்பக் கல்வியை குடவத்தூரிலும், உயர் கல்வியை திரிகண்ணமங்கலத்திலும் பெற்றார். பின்னர் பட்டப்படிப்பை மகாத்மா காந்தி கல்லூரி, பின்னர் தேவசும போர்ட் கல்ல்லூரியிலும் பெற்றார். மாணவப் பருவத்தில் எஸ்.எஃப்.ஐ -இன் உறுப்பினராக தீவிரமாய் பங்கேற்றார். திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். படிப்பை முடித்து கேரள அரசு நலத்துறையிலும், பின்னர் கேரள பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார்.

நடிப்புத் துறையில்

1979ல் "ஞட்டாடி" என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகனாக முரளி நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இப்படம் திரைக்கு வரவில்லை. இவர் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் "சிதம்பரம்". குறுகிய காலத்தில் மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்தார். "ஆதாரம்" என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக நடித்தார். நான்குமுறை மாநில அரசு வழங்கும் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். ஒருமுறை சிறந்த துணை நடிகருக்கான விருதும் இவருக்கு கிடைத்தது. 2002ல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் "நெய்துக்காரன்" என்ற திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பால் வென்றெடுத்தார்.

தமிழில் முரளியை அறிமுகப்படுத்தியவர் அழகம் பெருமாள். அவரது டும் டும் டும் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்தார். சரணின் ஜெமினி, அமீ‌ரீன் ராம் (திரைப்படம்), வெற்றிமாறனின் பொல்லாதவன் ஆகிய படங்களில் முரளி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அரசியலில்

முரளி 1999 ஆம் ஆண்டில் லோக சபை தேர்தலில் மர்க்சிசக் கம்யூனிசக் கட்சியில் போட்டியிட்டு தோற்றார்.

மறைவு

நீ‌ரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த முரளி திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் 2009, ஆகஸ்ட் 6 இரவு 8.20 மணிக்கு இறந்தார்[1]. முரளிக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.