அசோக் குமார்

அசோக் குமார் (Ashok Kumar, வங்காள மொழி অশোক কুমার গাঙ্গুলি , 13 அக்டோபர் 1911 – 10 திசம்பர் 2001) என்றும் அன்பாக தாதாமோனி என்றும் அழைக்கப்படும் குமுத்லால் கஞ்சிலால் கங்குலி ஓர் இந்திய திரைப்பட நடிகர். விடுதலைக்கு முந்தைய பிரித்தானிய இந்தியாவில் வங்காள மாகாணத்தில் பாகல்பூரில் பிறந்து இந்திய திரைப்படங்களில் உன்னத நிலையை எட்டியவர். இவரது பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 1988ஆம் ஆண்டில் தாதாசாகெப் பால்கே விருதும் 1998ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருதும் வழங்கியுள்ளது.

அசோக் குமார்
பிறப்புகுமுத்லால் குஞ்சிலால் கங்குலி
அக்டோபர் 13, 1911(1911-10-13)
பாகல்பூர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு10 திசம்பர் 2001(2001-12-10) (அகவை 90)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இறப்பிற்கான
காரணம்
மாரடைப்பு
இருப்பிடம்செம்பூர், மும்பை, இந்தியா
மற்ற பெயர்கள்சஞ்சய்
அசோக் குமார்
பணிநடிகர், ஓவியர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1936–1997
வாழ்க்கைத்
துணை
சோபா தேவி
உறவினர்கள்அனூப் குமார், கிஷோர் குமார்(சகோதரர்கள்), சதி தேவி (சகோதரி)

பிறப்பும் , வளர்ப்பும்

அசோக்குமார் வங்காள ப்ரெசிடென்ஸி பகுதியில் பகல்பூரில் குமுத்லால் என்ற இயற் பெயரில் பிறந்தார் . இவர் வழக்கறிஞர் ஆனா தந்தை குஞ்சிலால் கங்குலிக்கும் , கவுரிதேவிக்கும் மூத்த மகனாய் பிறந்தார் . இரண்டு வருடம் கழித்து பிறந்த தங்கை சதிதேவி சஷாதர் முகர்ஜிக்கு மிக சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டார் .அடுத்து பிறந்த தமையன் பெயர் அனூப் குமார் 15 வருட இடை வெளியில் 1926 இல் பிறந்தார் . இதை அடுத்து மூன்று வருடத்தில் அபாஸ் என்ற கிஷோர் குமார் 1929 இல் பிறந்தார்

சொந்த வாழ்கை

அக்கால வழக்கப்படி மிக சிறிய டீன் ஏஜ் பருவத்திலேயே ஷோபா என்பாரை திருமணம் செய்தார் . இது பெற்றோர்களால் நடத்தப்பட்ட திருமணம் ஆகும் . இந்த திருமணம் மகிழ்ச்சியாகவும் , கோட்பாட்டுக்குள் அடங்கியதாயும் நடுத்தர வாழ்க்கையையே பின்பற்றி யதாகவும் அமைந்தது . இவர்களுக்கு அரூப் கங்குலி என்ற மகனும் , பார்தி படேல் , ரூபா வர்மா , ப்ரீத்தி கங்குலி ஆகிய மகள்களும் அடுத்தடுத்து பிறந்தனர்

அரூப் கங்குலி பேஸுபான் என்ற படத்தில் நடித்தார் .இப்படம் தோல்வி அடைய பின்னர் ஒரு கார்ப்பரேட் கம்பனியில் வேலைக்கு சேர்ந்து விட்டார் .பார்திபடேல்படேல் என்பாருக்கு வாழ்க்கைப்பட்டு அனுராதா படேல் என்ற மகள் உள்ளார் .இவரும்ரூ சினிமாவில் நடித்துள்ளார் . அனுராதா படேல் நடிகர் கான்வல்ஜீத் சிங்கிற்கு வாழ்க்கைப்பட்டுள்ளார்.

பெற்றோர் விருப்பத்தை மீறி இரண்டாவதாய் ஹமீது ஜாப்பிரி என்ற முஸ்லிமை மணந்தார் இதன் மூலமாக ஷாஹீன் ஜாப்பிரி என்ற மகள் பிறந்தார். இவரே சல்மான் கானின் முதல் காதலி

ரூபா வர்மா என்ற இரண்டாவது மகள் தேவன் வர்மா என்ற காமெடி நடிகருக்கு வாழ்கை பட்டுள்ளார் . ப்ரீத்தி கங்குலி,என்ற மூன்றாவது மகள் 1970 மற்றும் 1980 களில் பல படங்களில் சிரிப்பு நடிகை யாக நடித்துள்ளார் .இவர் திருமணமே செய்து கொள்ளாமல் 2012 இல் இறந்தார்

ஆரம்ப வாழ்க்கையும் , சினிமா நடிகர் ஆன வரலாறு

குமுத்லால் கல்கத்தா ப்ரெசிடெண்சி கல்லூரியில் கல்வி பயின்றார் .அவர் வழக்கறிஞர் வேலைக்கு படித்தாலும் அவரது கவனம் முழுவதும் சினிமா மீதே சென்றது .எனவே பம்பாய்க்கு சென்று தன மைத்துனருடன் பாம்பே டாக்கீஸில் லேப் உதவியாளராக பணி புரிந்தார் .

குமுத்லால் கங்குலி ஒரு ஆய்வக உதவியாளராக மகிழ்ச்சியாக பணிபுரிந்தார், 1936 ஆம் ஆண்டில் மும்பை டாக்கீஸ் தயாரிப்பு ஜீவன் நையா . அப்போது நட்சத்திரமான தேவிகா ராணி நடிகர் நஜ்முல் ஹாசன் என்ற கதாநாயகனுடன் நடித்தார் . தேவிகா ராணி யின் கணவர் ஹிமான்சு ராய் அப்படத்தின் தயாரிப்பாளர் . என்றாலும் நஜ்முல் ஹாசனுடன் காதல் வயப்பட்டு தேவிகாரணி அவருடன் ஓடி விட்டார் . பின்னர் சில நாட்களில் தேவிகாராணி கணவருடன் திரும்ப வந்து விட்டார் .பழைய கதாநாயகன் நஜ்முல் ஹாசன் நடிக்க மறுத்து விட்டார் . எனவே கதாநாயகனுக்கு உரிய லட்சணங்கள் இல்லாது பார்வைக்கு சுமாராக இருந்த குமுத்லால் அசோக்குமார் என்ற பெயர் மாற்றப்பட்டு அப்படத்தின் கதாநாயகனாக மிளிர்ந்தார் .

சிகரத்தை தொட்ட அசோக்குமார்

அதே ஆண்டில் தேவிகாராணி யுடன் நடித்த அச்சுத கன்யா 1936 இல்வெளிவந்து நன்றாக ஓடியது ஜென்மபூமி , 1936 இஸ்சாட் , 1937 சாவித்திரி , 1937 வசான் ,1938 நிர்மலா 1938 என்று தொடர் வெற்றியை தேவிகாராணி யின் நிழலில் அனுபவித்தார் .

பின்னர் லீலா சிட்னிஸ் படங்களில் கங்கன் , 1939 பாந்தன் , 1940 ஆசாத் , 1940 ஜுலா , 1941 என்று தொடர் வெற்றி கண்டு இந்தி படத்தில் ஒரு நிலையான அந்தஸ்தை 5 வருடங்களில் பெற்றுவிட்டார்

1943இல் வெளிவந்த கிஸ் மத் மாபெரும் வெற்றி அடைந்தது . எங்கு சென்றாலும் ரசிகர் கூட்டம் மொய்த்தது . சில சமயங்களில் ரசிகர் பி பாட்டாளத்தை தடியடி நடத்தி கலைத்த வரலாறும் உண்டு இவ்வாறு சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்

இறப்பு

இவர் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 10 இல் 90 வயதில்திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் . அப்போது அடல் பிகாரி வாஜ்பாய் நடிப்புக்கு ஒரு இலக்கணம் வகுத்தவர் என்று பாராட்டினார்

அசோக்குமாரின் சுருக்க வரலாறு

  • பிஹார் மாநிலம் பகல்பூரில் (அன்றைய வங்காள மாகாணம்) 1911-ல் பிறந்தார். குமுத்லால் கஞ்சிலால் கங்குலி என்பது இயற்பெயர். கல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரசிடென்சி கல்லூரியில் சட்டம் படித்தபோதிலும், வழக்கறிஞர் தொழிலில் ஆர்வம் இல்லை.
  • சினிமாவில் தொழில்நுட்பக் கலைஞராகப் பணிபுரிய விரும்பினார். இவரது அண்ணன் சஷாதர் முகர்ஜி, பாம்பே டாக்கீஸில் வேலை செய்துவந்தார். 1930-களில் இவரும் அங்கு சென்று, தொழில்நுட்பக் கலைஞராகப் பணிபுரியத் தொடங்கினார்.
  • நடிக்கும் வாய்ப்புகூட எதேச்சையாகத்தான் கிடைத்தது. ‘ஜீவன் நையா’ என்ற படத்தில் நஜ்முல் ஹசன் நடிக்க முடியாத சூழலில் அவருக்கு பதிலாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சினிமாவுக்காக ‘அசோக் குமார்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. அரை மனதுடனேயே நடித்தார்.
  • அதே ஆண்டில் ‘அச்சுத் கன்யா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. தேவிகா ராணியுடன் சேர்ந்து நடித்த அந்த படம் இமாலய வெற்றி பெற்றது. இதையடுத்து, ‘ஜன்ம பூமி’, ‘சாவித்ரி’, ‘வசன்’ உள்ளிட்ட பல படங்களில் இந்த வெற்றி ஜோடி வலம் வந்தது.
  • ‘கங்கண்’, ‘பந்தன்’, ‘ஆஸாத்’, ‘ஜூலா’ ஆகிய திரைப்படங்கள் இவரை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தின. முதன்முதலாக இவர் வில்லத்தனமான நாயகனாக நடித்து, 1943-ல் கியான் முகர்ஜி இயக்கிய ‘கிஸ்மத்’ திரைப்படம் இந்தியத் திரையுலகின் அதுவரையிலான அனைத்து சாதனைகளையும் முறியடித்து, அமோக வசூலையும் குவித்தது.
  • இந்தியத் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக புகழ்பெற்றார். ‘சல் சல் ரே நவ்ஜவான்’, ‘ஷிகாரி’, ‘சாஜன்’, ‘சர்கம்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை ஈட்டின. ‘ஜுவல் தீஃப்’, ‘ஆஷீர்வாத்’, ‘புரப் அவுர் பஸ்சிம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
  • ஒரே மாதிரி வேடங்களில் நடிக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். நடிப்பில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர். தேவ் ஆனந்த், திலீப் குமார், ராஜ் கபூர் என பல நாயகர்கள் வந்தாலும் இவரது புகழ் மங்கவில்லை.
  • ‘ஹம்லோக்’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். ‘ஜித்தி’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்தார். 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சிறந்த ஓவியர், ஹோமியோபதி மருத்துவராகவும் திகழ்ந்தார்.
  • சிறந்த பாடகர், நடிகரான கிஷோர் குமார் இவரது தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. 1987-ல் இவரது பிறந்த நாளன்று தம்பி கிஷோர் இறந்ததால், அதுமுதல் இவர் தன் பிறந்தநாளை கொண்டாடவே இல்லை.
  • சங்கீத நாடக அகாடமி விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், சிறந்த நடிகருக்கான தேசிய விருது, தாதா சாஹேப் பால்கே விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்ம பூஷண் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தி திரையுலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டிப் பறந்த அசோக் குமார் 90-வது வயதில் (2001) மறைந்தார்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.