குல்சார்

சம்பூரண் சிங் கால்ரா (Sampooran Singh Kalra, பஞ்சாபி: ਸਮਪੂਰਨ ਸਿੰਘ ਕਾਲਰਾ, இந்தி: संपूरण सिंह कालरा, உருது: سمپورن سنگھ کالرا) (பிறப்பு: ஆகத்து 18, 1934), பரவலாக அவரது புனைப்பெயரான குல்சார் (Gulsar, பஞ்சாபி: ਗੁਲਜ਼ਾਰ, இந்தி: गुलज़ार, உருது: گُلزار ), ஓர் இந்திய கவிஞர், பாடலாசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர்.[1] இந்தி-உருது மொழியில் முதன்மையாக எழுதும் குல்சார் பஞ்சாபி மொழியிலும் பிராஜ் பாசா, கரிபோலி, அரியான்வி, மார்வாரி போன்ற இந்தியின் பல வட்டார வழக்குகளிலும் எழுதியுள்ளார்.

குல்சார்
தனது தொகுப்பு சாந்த் பரோசா ஹை வெளியீடின்போது குல்சார் (2008)
பிறப்புசம்பூரண் சிங் கால்ரா
ஆகத்து 18, 1934 (1934-08-18)
தினா (பாக்கித்தான்), ஜீலம் மாவட்டம்,பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
பணிதிரைப்பட இயக்குனர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் யாரிப்பாளர், கவிஞர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1961–செயற்பாட்டில்
பெற்றோர்மக்கன்சிங் கால்ரா,சுஜன் கௌர்
வாழ்க்கைத்
துணை
ராக்கி
பிள்ளைகள்மேக்னா குல்சார்

குல்சாருக்கு 2002இல் சாகித்திய அகாதமி விருதும் 2004இல் பத்ம பூசண் விருதும் வழங்கப்பட்டுள்ளது. பல தேசியத் திரைப்பட விருதுகளும் பிலிம்பேர் விருதுகளும் பெற்றுள்ளார். 2009ஆம் ஆண்டு சிலம்டாக் மில்லியனயர் (2008) திரைப்படத்தில் ""ஜெய் ஹோ"" என்ற இவரது பாடலுக்கு சிறந்த முதன்மைப் பாடலுக்கான அகாதமி விருது பெற்றார். அதே பாடலுக்காக சனவரி 31, 2010இல் கிராமி விருதும் பெற்றுள்ளார். இவருக்கு திரைப்படத்துறையினருக்கான இந்தியாவின் மிக உயரிய விருதான தாதாசாஹெப் பால்கே விருது 2013ஆம் ஆண்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.[2]

குல்சாரின் கவிதைகள் மூன்று தொகுப்புகளாக சாந்த் புக்ராஜ்கா, ராத் பச்மினே கி மற்றும் பந்த்ரா பாஞ்ச் பச்சத்தர் வெளியிடப்பட்டுள்ளன. இவரது சிறுகதைகள் ராவி-பார் (பாக்கித்தானில் டஸ்ட்கத்) மற்றும் துவான் (புகை) என வெளியிடப்பட்டுள்ளன..

இசையமைப்பாளர்கள் ராகுல் தேவ் பர்மன், ஏ. ஆர். ரகுமான் மற்றும் விஷால் பரத்வாஜ் ஆகியோருடன் பாடலாசிரியராகச் சிறப்பாகப் பணியாற்றி உள்ளார். பிற பாலிவுட் இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார். திரைப்பாடல்கள் தவிர பல திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். இவர் இயக்கிய திரைப்படங்களும் பல விருதுகளைப் பெற்றுள்ளன. சின்னத்திரையில் மிர்சா காலிப், தஹரீர் முன்ஷி பிரேம் சந்த் கி ஆகிய நெடுந்தொடர்களைத் தயாரித்துள்ளார்.

வாழ்க்கை வரலாற்று நூல்கள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.